பொறியியல் படிப்பு பாடத் திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்படும் – அமைச்சர் பொன்முடி

 

பொறியியல் படிப்பு பாடத் திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்படும் – அமைச்சர் பொன்முடி

அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்புக்கான பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் பொன்முடி, பாடத்திட்டத்தில் சில மாற்றங்களை கொண்டுவர வேண்டியுள்ளது. பொறியியல் படிப்பில் வேலைவாய்ப்புக்காக சேருகிற மாணவர்கள் தான் அதிகம். அவர்களுக்கு ஏற்ற கல்வியை கொடுக்க வேண்டும். அந்த அடிப்படையில் வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சிக்கு தேவையான மாணாக்கர்களை உருவாக்குவதற்கான பாடத்திட்டம் கொண்டு வரப்படும். அதாவது மாணவர்களுக்கு பயிற்சி வழங்க கூடிய அமைப்பில் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும் என துணைவேந்தர் கூறியிருக்கிறார் என்று தெரிவித்தார்.

பொறியியல் படிப்பு பாடத் திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்படும் – அமைச்சர் பொன்முடி

தொடர்ந்து பேசிய அவர், தொழிற்சாலைகளில் மாணவர்கள் பயிற்சி எடுக்கும் விதமாக பாடத்திட்டங்களை உருவாக்க வேண்டும் என அவரிடம் சொல்லியிருக்கிறோம். ஆராய்ச்சிக்கு தேவையான அடிப்படை வசதிகளை சர்வதேச அளவில் உருவாக்க வேண்டும் என்பதும் இந்த பாடத்திட்டத்தில் அடங்கியிருக்கும். பாடத்திட்டங்களை மாற்றி அமைத்து அண்ணா பல்கலைக்கழகத்தை பல நாடுகளுக்கு மத்தியில் உயர்ந்த பல்கலைக்கழகமாக, பன்னாட்டுப் பல்கலைக் கழகமாக உருவாக்குகிற திட்டத்தை துணைவேந்தர் செயல்படுத்துவார் என்று நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. முதல்வரும் அதற்காக வாழ்த்துக்களை சொல்லி அனுப்பியிருக்கிறார் என்றார்.

மேலும் உயர்கல்வித் துறை துணைவேந்தரோடு ஒத்துழைத்து அண்ணா பல்கலைக்கழகத்தை பன்னாட்டு அளவில் உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்த அமைச்சர் பொன்முடி, அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பதவியேற்கவுள்ள வேல்ராஜுக்கு தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.