“பெயரின் முன்எழுத்தையும் தமிழில் எழுதுங்கள்” – அமைச்சர் பொன்முடி பேச்சு!

 

“பெயரின் முன்எழுத்தையும் தமிழில் எழுதுங்கள்” – அமைச்சர் பொன்முடி பேச்சு!

தமிழில் பெயர் எழுதும்போது முன் எழுத்தையும் தமிழில் எழுத வேண்டும் என அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தொழில்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அமைச்சர் தங்கம் தென்னரசு முதலில் தொழில் துறை அறிவிப்புகளை வெளியிட்டார். பின்னர் தமிழ் வளர்ச்சித் துறை கொள்கை விளக்கக் குறிப்பை வெளியிட்டார். அப்போது பேசிய அவர், தமிழில் பெயர் எழுதினால் முன் எழுத்தையும் தமிழில் எழுதும் நடைமுறையை அனைவரும் பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த நடைமுறை பள்ளி, கல்லூரி, அரசு ஆவணங்களில் கொண்டுவரப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொதுமக்கள் பயன்பாடுகளில் இம்முறை பின்பற்ற ஊக்குவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

“பெயரின் முன்எழுத்தையும் தமிழில் எழுதுங்கள்” – அமைச்சர் பொன்முடி பேச்சு!
e ini

தொடர்ந்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, அயல்நாடு மற்றும் வெளிநாடுகளில் தமிழ் கற்க தமிழ் பழக்கரை கழகம் உருவாக்கப்படும். தமிழ் அறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு பரிவுத் தொகை வழங்கப்படும். புகழ்பெற்ற தலைவர்கள் தமிழறிஞர்களின் ஒளி, ஒலி பொழிவுகள் ஆவணம் ஆக்கப்படும். கோவில்களில் திருக்குறள் வகுப்புகள் நடத்தப்படும் என்று அறிவித்தார். அத்துடன், குடியிருப்புகள் வணிக வளாகங்களுக்கு தமிழில் பெயர் சூட்டி ஊக்குவிக்கப்பட வழிமுறைகள் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.