சென்னையில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது – அமைச்சர் பாண்டியராஜன்

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 4,329 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 2,721 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் சென்னையில் மேலும் 2,082 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 64,689 ஆக அதிகரித்தது. மேலும், மொத்த பாதிப்பில் சென்னையில் மட்டுமே 63.31% பாதிப்பு இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ஆவடியில் கொரோனா தடுப்பு நோய் சிறப்பு மருத்துவ முகாம்களை அமைச்சர் பாண்டியராஜன் பார்வையிட்டார். அதன் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், சென்னையில் நேற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை விட குணமடைந்தோர் எண்ணிக்கை 91 கூடுதலாக இருப்பதாகவும் முதல்முறையாக அதிகமான கொரோனா நோயாளிகள் குணமடைந்து இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், இதனை Flattening the curve என அழைப்பார்கள் என்றும் சென்னையில் பாதிப்பு குறையத் தொடங்கியதாகவும் கூறினார்.

Most Popular

மரணங்களைத் தடுக்கும் வழி என்பது மரணங்களை மறைப்பது அல்ல- ஸ்டாலின்

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. தினசரி கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் அளவு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து...

கேரள நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 28 பேர் ஆக அதிகரிப்பு

கேரளா: மூணாறு அருகே ராஜமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. கேரள மாநிலம் மூணாறு பகுதியில் உள்ள பெட்டி முடி பகுதியில் உள்ள கண்ணன் தேவன் டீ எஸ்டேட் தேயிலைத்...

நீலகிரியில் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் – விஜயகாந்த்

நீலகிரியில் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீலகிரி மாவட்டத்தில் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக தொடர்...

“சொப்னா வழியே சிறந்த வழி” -என தங்க கடத்தலின் சொர்க்கபூமியாக மாறிய கேரளா -தொடரும் பல கடத்தல்கள்..

கேரளா மாநிலம் கண்ணூர் சர்வதேச விமான நிலையத்தில் கிட்டத்தட்ட ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கேரள தங்க ஊழல் பற்றிய விசாரணை தீவிரமாக நடந்து வரும் வேளையில் , சொப்னா வழியில்,...