மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டுவிழாவுக்கு திருமாவை அழைக்காதது ஏன்? அமைச்சர் விளக்கம்

மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டுவிழாவுக்கு திருமாவை அழைக்காதது ஏன்? அமைச்சர் விளக்கம்

அரியலூரில் தொடங்க உள்ள மருத்துவக் கல்லூரிக்கு முதல்வர் பழனிசாமி இன்று காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். ரூ.347 கோடி செலவில் 10.83 ஹெக்டர் நிலப்பரப்பில் கட்டப்பட உள்ள இந்த மருத்துவமனை அரியலூர் தெற்கு கிராம பகுதியில் அமைய உள்ளது. மேலும் மொத்த செலவில் மத்திய அரசின் பங்களிப்பாக 60 சதவீத நிதியும், மாநில அரசின் பங்களிப்பாக 40 சதவீத நிதியும் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவனை அரியலூர் மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவுக்கு அழைக்காதது பெரும் கேள்விக்கு வித்திட்டது.

மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டுவிழாவுக்கு திருமாவை அழைக்காதது ஏன்? அமைச்சர் விளக்கம்

இந்நிலையில் திருமாவளவை விழாவுக்கு அழைக்காதது குறித்து விளக்கமளித்த அமைச்சர் பாண்டியராஜன், “வீடியோ கால் மூலம் அடிக்கல் நாட்டல் என்பதாலும் கொரோனா காலம் என்பதாலேயே தான் திருமாவளவன் அழைக்கப்படாமல் இருந்திருக்கலாம். அவரை வெண்டுமென்றே நிராகரிக்கவில்லை. இதனை திருமாவளவன் புரிந்துகொள்வார் என நம்புகிறேன்” என தெரிவித்தார்.