சசிகலா வருவதற்குள் முதல்வர் 100 தொகுதிகளுக்கு மேல் பிரச்சாரம் செய்து முடித்துவிடுவார்- அமைச்சர் பாண்டியராஜன்

 

சசிகலா வருவதற்குள் முதல்வர் 100 தொகுதிகளுக்கு மேல் பிரச்சாரம் செய்து முடித்துவிடுவார்- அமைச்சர் பாண்டியராஜன்

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, இம்மாதம் 27 ஆம் தேதி விடுதலையாக வாய்ப்புள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஆளுங்கட்சியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஆவடியில் அமைச்சர் பாண்டியராஜன், “திரையரங்குகளில் 100 சதவிகிதம் இருக்கைகளை அனுமதித்த விவகாரம் குறித்து இந்தியாவிலேயே முதல்முறை இந்த தளர்வு அறிவிக்கப்பட்டதால் மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது. மருத்துவ நிபுணர்கள் குழுவிடம் ஆலோசனை செய்த பின்னரே முதல்வர் அதுகுறித்து அறிக்கை வெளியிட்டார். விஜய், சிம்பு கேட்டுக்கொண்டதற்காக திரையரங்கில் 100% இருக்கை அனுமதிக்கவில்லை, அவர்களின் கோரிக்கை கேட்டுக்கொண்டு முதல்வரே முடிவெடுத்தார். மத்திய அரசின் அறிவுரையை முதல்வர் தீவிரமாக ஆராய்ந்து நல்ல முடிவை அறிவிப்பார்.

சசிகலா வருவதற்குள் முதல்வர் 100 தொகுதிகளுக்கு மேல் பிரச்சாரம் செய்து முடித்துவிடுவார்- அமைச்சர் பாண்டியராஜன்

சசிகலா வருகை அதிமுகவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதிமுக எக்ஸ்பிரஸ் வேகத்தில் சென்றுகொண்டிருக்கிறது. இதில் யாருடைய தாகமும் ஒன்றும் செய்ய முடியாது. ஜனவரி 27 ஆம் தேதி சசிகலா வருவதற்குள் முதல்வர் 100 தொகுதிகளுக்கு மேல் பிரச்சாரம் செய்து முடித்துவிடுவார், எங்கள் நோக்கம் மக்கள் தான், எனவே எதுவும் திசைதிருப்ப முடியாது. அஞ்சல் துறையில் தேர்வு தமிழ் புறக்கணிக்கப்பட்ட குறித்து எதிர்ப்பு தெரிவிக்கப்படும், இதுகுறித்து முதல்வர் மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுப்பார். அதிமுக பாஜக கூட்டணி வலுவாக உள்ளது. தொகுதி பங்கீடு குறித்து முதல்வர், துணை முதல்வர் முடிவெடுப்பார்கள். பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் எந்த தயவு தாட்சனியும் இன்றி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதில் அரசின் தலையீடு இல்லை. ஊழல் பற்றி திமுக பேசுவது பொதுமக்களிடையே நகைப்பிற்குறிப்பியதாக உள்ளது” எனக் கூறினார்.