எம்ஜிஆராக சித்தரித்து விஜய் ரசிகர்கள் போஸ்டர் அடித்து ஒட்டுவதில் தவறில்லை: அமைச்சர் பாண்டியராஜன்

 

எம்ஜிஆராக சித்தரித்து விஜய் ரசிகர்கள் போஸ்டர் அடித்து ஒட்டுவதில் தவறில்லை: அமைச்சர் பாண்டியராஜன்

எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரை சொல்லி ஓட்டுக் கேட்கும் உரிமை எங்களுக்கு தான் உள்ளது என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

திருவேற்காட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், “தமிழ் வளர்ச்சியை பொருத்தவரை தமிழுக்கு முன்னுரிமை கொடுத்து அதிமுக அரசு ஏராளமான விஷயத்தை செய்து வருகிறோம். மத்திய அரசு உதவியை இன்னும் அதிகமாக எதிர்பார்க்கிறோம், தமிழையும் சேர்த்து அழிக்கின்றனர் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியது திமுக ஆட்சிக்கு பொருந்தும், அதிமுக ஆட்சிக்கு பொருந்தாது. வரும் தேர்தலில் சாதனைகளை பட்டியலிட்டு அதன் அடிப்படையில் வாக்குகள் கேட்கப் போகிறோம்.

எம்ஜிஆராக சித்தரித்து விஜய் ரசிகர்கள் போஸ்டர் அடித்து ஒட்டுவதில் தவறில்லை: அமைச்சர் பாண்டியராஜன்

நாம் பாதுகாப்பாக இருந்து கொண்டால் கொரோனாவின் இரண்டாவது அலை வருவதற்கு வாய்ப்பில்லை. நாம் மெத்தனமாக இருந்து விட்டால் அக்டோபரில் கொரோனாவின் இரண்டாவது அலை வருவதை யாராலும் தடுக்க முடியாது. கொரோனாவை விரட்டி அடிக்கும் பணியில் தமிழகம் முன்னணியில் உள்ளது. எம்ஜிஆர் தோற்றத்தில் நடிகர் விஜய்க்கு அவரது ரசிகர்கல் போஸ்டர் ஒட்டுவது தவறில்லை. அது ரசிகர்களின் விருப்பம். அதில் நான் கருத்து சொல்ல முடியாது. விஜய், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை போல் அவர் இருக்க வேண்டும் என நினைத்து அவரது ரசிகர்கள் போஸ்டர் அடித்து ஒட்டுகின்றனர். அது வரவேற்க தகுந்த விஷயம் என கருதுகிறேன். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயரை சொல்லி அவர்கள் ஓட்டு கேட்டு போகாத வரை எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை, அவர்களின் பெயரை சொல்லி ஓட்டு கேட்கும் உரிமை எங்களுக்கு தான் உள்ளது” என தெரிவித்தார்.