‘தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு’ : அமைச்சர் பாண்டியராஜன் தகவல்!

‘தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு’ : அமைச்சர் பாண்டியராஜன் தகவல்!

மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்க வாய்ப்பிருப்பதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

‘தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு’ : அமைச்சர் பாண்டியராஜன் தகவல்!

கொரோனா பரவல் தமிழகத்தில் அதிகரித்து வந்த நிலையில் கடந்த பல மாதங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா பரவல் 300க்கும் கீழ் குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டது. இதையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.ஆனால் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு மூன்று மடங்காக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 945 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

‘தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு’ : அமைச்சர் பாண்டியராஜன் தகவல்!

இந்நிலையில் சென்னை ஆவடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் பாண்டியராஜன் அப்பகுதி மக்களை சந்தித்து கடந்த சில நாட்களாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். அந்த வகையில் நேற்று அவர் அங்கு ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த தேர்தல் பணியை தொடங்கிவைத்தார்.

‘தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு’ : அமைச்சர் பாண்டியராஜன் தகவல்!

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பாண்டியராஜன், தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை கடந்த 10 ஆண்டுகளாக நிறைவேற்றவில்லை ஏன்? என மக்கள் கேட்பது நியாயமான கேள்வி தான். ஆனால் நாங்கள் கொடுத்த பெருவாரியான வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவி வருகிறது. அதனால் அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள் இப்படியே போனால் தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலை பரவினால் முழு ஊரடங்கு கொண்டு வர வாய்ப்புள்ளது என்றார்.