எனக்கும் அனிதா வீடியோவுக்கு சம்பந்தம் இல்லை.. அமைச்சர் பாண்டியராஜன் விளக்கம்!

எனக்கும் அனிதா வீடியோவுக்கு சம்பந்தம் இல்லை.. அமைச்சர் பாண்டியராஜன் விளக்கம்!

தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜனின் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அதில் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதா, திமுகவுக்கு ஓட்டு போட வேண்டாமென கூறியது போல சித்தரிக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியது.

எனக்கும் அனிதா வீடியோவுக்கு சம்பந்தம் இல்லை.. அமைச்சர் பாண்டியராஜன் விளக்கம்!

அந்த வீடியோவை பார்த்த அனிதாவின் அண்ணன் மணிரத்னம் கொதித்தெழுந்தார். உங்களது மகள் ஒரு இலட்சியத்துடன் இறந்திருந்தால் அவரை வைத்து இப்படித் தான் வாக்கு சேகரிப்பீர்களா? ஜெயலலிதாவை வைத்தே வாக்கு சேகரித்த ஆட்கள் தானே நீங்கள்.. என அமைச்சர் பாண்டியராஜானை விளாசினார். அதுமட்டுமில்லாமல், அரியலூர் எஸ்.பியிடம் தான் புகாரளிக்கப் போவதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, அமைச்சர் பாண்டியராஜன் அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கினார்.

எனக்கும் அனிதா வீடியோவுக்கு சம்பந்தம் இல்லை.. அமைச்சர் பாண்டியராஜன் விளக்கம்!

அந்த வீடியோவில், என்னுடைய ட்விட்டர் கணக்கில் இருந்து நீட் பற்றி ஒரு ட்வீட் போடப்பட்டிருக்கிறது. அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த ட்வீட் என்னுடைய அனுமதி இல்லாமல் வந்திருக்கிறது. அது எப்படி என கண்டறிந்து அதை செய்தவர்களையும் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும். சைபர் கிரைமில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும். எந்த நிலையிலும் யாரையும் அவதூறு செய்ய வேண்டுமென்ற எண்ணம் எனக்கு கிடையாது. பதிவு செய்தவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.