அனிதா ட்வீட்டால் கிளம்பிய சர்ச்சை… வீடியோவை டெலிட் செய்த அமைச்சர்!

 

அனிதா ட்வீட்டால் கிளம்பிய சர்ச்சை… வீடியோவை டெலிட் செய்த அமைச்சர்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. ஆட்சிக்கு வர துடித்துக் கொண்டிருக்கும் திமுகவும், ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள துடித்துக் கொண்டிருக்கும் அதிமுகவும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கின்றன. தேர்தல் நேரத்தில் ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் மாறி மாறி விமர்சித்துக் கொள்வது வழக்கமான ஒன்று தான் என்றாலும், இந்த முறை அனைத்தும் எல்லை மீறி சென்றது போலவே தோன்றியது.

அனிதா ட்வீட்டால் கிளம்பிய சர்ச்சை… வீடியோவை டெலிட் செய்த அமைச்சர்!

அதாவது, அரசியல் கட்சிகளின் தலைவர்களின் பெயரையே குறிப்பிட்டு அவர்கள் செய்த தவறுகளை விளம்பரமாக எடுத்து, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அதிமுகவுக்கு எதிராக நீட் பிரச்னை, விவசாயிகள் பிரச்னை, பொள்ளாச்சி வழக்கு போன்ற ஆயுதங்களை திமுக கையிலெடுத்திருக்கும் அதே வேளையில், திமுக ஆட்சியில் நடந்த ஊழல் உள்ளிட்ட பிரச்னைகளை அதிமுக கையிலெடுத்துள்ளது. இந்த அளவுக்கு அதிமுக – திமுக இடையே மோதல் போக்கு நீடிக்கிறது.

அனிதா ட்வீட்டால் கிளம்பிய சர்ச்சை… வீடியோவை டெலிட் செய்த அமைச்சர்!

இந்நிலையில், நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதா பேசியது போன்ற ஒரு வீடியோவை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில், திமுகவுக்கு வாக்களிக்க வேண்டாமென அனிதா பேசியது போன்று சித்தரிக்கப்பட்டிருந்தது. அமைச்சர் பாண்டியராஜன் போட்ட இந்த ட்வீட் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

அனிதா ட்வீட்டால் கிளம்பிய சர்ச்சை… வீடியோவை டெலிட் செய்த அமைச்சர்!

இதற்கு அனிதாவின் அண்ணன் மணிரத்னம், கண்டனக் குரலை எழுப்பினார். உங்கள் மகள் இறந்திருந்தால் அவரை பயன்படுத்தி இப்படித் தான் வீடியோ போடுவீர்களா? என அமைச்சர் பாண்டியராஜனுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பினார். இந்த விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியதையடுத்து, அமைச்சர் பாண்டியராஜன் அந்த வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கினார்.