“வேல் யாத்திரை போன்றவை தேவையற்றது” – அமைச்சர் பாண்டியராஜன் கருத்து!

 

“வேல் யாத்திரை போன்றவை தேவையற்றது” – அமைச்சர் பாண்டியராஜன் கருத்து!

பாஜக நடத்தும் வேல் யாத்திரை போன்றவை தேவையற்றது என அமைச்சர் பாண்டியராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் ஆளும் கட்சியான அதிமுகவும் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், அக்கட்சிக்குள் அடுத்தடுத்த பிரச்னைகள் எழுந்து வருகிறது என்றே சொல்ல வேண்டும். குறிப்பாக, பாஜக- அதிமுக கூட்டணி இடையே பல குழப்பங்கள் நீடிக்கிறது. விநாயகர் சிலைக்கு தடை பிரச்னையில் தொடங்கி, தற்போது வேல் யாத்திரை பிரச்னை வரை பாஜக- அதிமுக இடையே சலசலப்பு நீடிக்கிறது.

“வேல் யாத்திரை போன்றவை தேவையற்றது” – அமைச்சர் பாண்டியராஜன் கருத்து!

இதன் காரணமாக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்படலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை என முதல்வர் பழனிசாமியும், எல்.முருகனும் மாறி மாறி கூறுகின்றனர். இந்த நிலையில் பாஜக நடத்தும் வேல் யாத்திரை போன்றவை தேவையற்றது என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விமர்சித்துள்ளார்.

“வேல் யாத்திரை போன்றவை தேவையற்றது” – அமைச்சர் பாண்டியராஜன் கருத்து!

வேல் யாத்திரை போன்ற ஆர்ப்பாட்ட, ஆரவார அரசியல் தேவையில்லை என்றும் தமிழகத்தின் வளர்ச்சிக்கு பாஜக உதவினால் தான் மக்கள் மனதில் நினைத்த இடம் கிடைக்கும் என்றும் இந்துமத வழிபாட்டிற்கு எதிரானது அதிமுக இல்லை, பாஜக கட்சியை வளர்க்க பல்வேறு வழிகள் உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.