இங்கேயும் ஹிந்தியா?.. அதிமுக அமைச்சருக்கு எதிராக பொங்கியெழுந்த மக்கள்!

 

இங்கேயும் ஹிந்தியா?.. அதிமுக அமைச்சருக்கு எதிராக பொங்கியெழுந்த மக்கள்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மக்கள் வாக்குகளை பெற அரசியல் கட்சிகள் பல்வேறு யுக்திகளை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஓட்டுக்காக காலில் விழுவதற்கு கூட தயங்காத வேட்பாளர்கள் மக்களுடன் அமர்ந்து டீ குடிப்பது, கபடி ஆடுவது போன்ற வழக்கமான அரசியல் நாடகங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றனர்.

இங்கேயும் ஹிந்தியா?.. அதிமுக அமைச்சருக்கு எதிராக பொங்கியெழுந்த மக்கள்!

இந்த சூழலில், ஆவடி தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனின் துண்டு பிரசுரம் ஹிந்தியில் அடிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. கடந்த முறை தேர்தலில் திமுக வேட்பாளரை 1,500 வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தினார். இந்த முறையும் வெற்றி பெற்றுவிட வேண்டுமென தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

இங்கேயும் ஹிந்தியா?.. அதிமுக அமைச்சருக்கு எதிராக பொங்கியெழுந்த மக்கள்!

அமைச்சர் பாண்டியராஜனின் நோட்டீஸ் ஹிந்தியில் அடிக்கப்பட்டிருந்ததால் குழப்பமடைந்த மக்கள், அதில் இருந்த அவரது புகைப்படத்தை பார்த்தே தேர்தல் நோட்டீஸ் என்று தெரிந்து கொண்டனர். ஆவடி தொகுதியில் அதிகமாக வடநாட்டை சேர்ந்தவர்கள் இருப்பதால் ஹிந்தியில் நோட்டீஸ் அச்சடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிந்தியை எதிர்க்கும் நம் தமிழக மக்கள், இதை மட்டும் ஏற்றுக் கொள்வார்களா என்ன?. வழக்கம் போல ஹிந்திக்கு எதிராக முழக்கமிட்டு அமைச்சர் பாண்டியராஜனை வசைபாடிக் கொண்டிருக்கிறார்கள். இவர் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.