தமிழகத்தில் ஊரடங்கு 5.0வுக்கு வாய்ப்பு: அமைச்சர் பாண்டியராஜன்

 

தமிழகத்தில் ஊரடங்கு 5.0வுக்கு வாய்ப்பு: அமைச்சர் பாண்டியராஜன்

மீண்டும் மீண்டும் பிரஷாந்த் கிஷோர் சொல்லுவதை கேட்டு ஸ்டாலின் செயல் படுகிறார் என அமைச்சர் பாண்டியராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னை ஆவடியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், “தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் மற்ற மாநிலங்களை விட குறைவாக உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ளதற்கு அரசும் சுகாதார பணியாளர்களின் அர்ப்பணிப்பும் காரணம். கொரோனா பொறுத்தவரை தற்போதுள்ள சூழல் நீடித்தால் சில தளர்வுகளுடன் அடுத்தகட்ட ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு 5.0வுக்கு வாய்ப்பு: அமைச்சர் பாண்டியராஜன்

அரசின் தவறான நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது என்ற ஸ்டாலினின் கருத்து தவறு என அவரது மனசாட்சிக்கே தெரியும். ஆரம்பத்தில் அரசின் செயல்பாடுகளை அவரே பாராட்டியுள்ளார். ஒட்டுமொத்த தமிழக காவல்துறையின் பணியை கொச்சைப்படுத்துவதாக உள்ளது. களப்பணியில் உள்ள மருத்துவர்கள்,தூய்மை பணியாளர்கள்,காவலர்கள் அர்ப்பணிப்பை கொச்சைப்படுத்துகிறார். அறைக்குள் அமர்ந்து அனைத்தையும் வாட்ஸப் மூலமாக பார்ப்பதால் கள எதார்தம் அரசின் பணி குறித்து ஸ்டாலினுக்கு தெரியவில்லை. மீண்டும் மீண்டும் பிரஷாந்த் கிஷோர் சொல்லுவதை கேட்டு செயல் படுகிறார். வெயிலில் இறங்கி பணிகளை பார்வையிட்டால் அரசின் சாதனைகள் புரியும்” என தெரிவித்துள்ளார்.