Home தமிழகம் திருமணத்திற்காக மதம் மாறுவது தான் தவறு! தனிஷ்க் நிறுவனத்தின் விளம்பரத்திற்கு அமைச்சர் பாண்டியராஜன் ஆதரவு

திருமணத்திற்காக மதம் மாறுவது தான் தவறு! தனிஷ்க் நிறுவனத்தின் விளம்பரத்திற்கு அமைச்சர் பாண்டியராஜன் ஆதரவு

இந்து மதத்தை சேர்ந்தவர் போல சித்தரிக்கப்பட்டுள்ள இளம் கர்ப்பிணி பெண்ணுக்கு, முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த அவரின் மாமியார் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்துவது போன்ற விளம்பரத்தினை கடந்த வாரம் தனிஷ்க் நிறுவனம் வெளியிட்டது. இந்த விளம்பரம் லவ் ஜிஹாத்தை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதாக சில இந்து மத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இதையடுத்து டிவிட்டரில் Boycott Tanishq என்ற ஹேஷ்டாக் டிரெண்டிங் ஆனது. தனிஷ்க் நிறுவனத்தை புறக்கணிப்போம் என்கிற பிரசாரத்தின் மூலம் டைட்டன் நிறுவனத்தின் பங்குகள் விலை சரிந்தன. இது போன்ற எதிர்ப்புகள் காரணமாக , அந்த விளம்பரத்தை யுடியூப்பில் இருந்து தனிஷ்க் நிறுவனம் நீக்கியது.

இந்நிலையில் சென்னை திருவல்லிக்கேணி
ஐஸ் ஹவுஸ் பகுதியிலுள்ள தர்காவில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.பாண்டியராஜன், “மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது அதிமுகவிற்கான இடத்தை கட்டாயம் எதிர்பார்க்கிறோம். அதற்கான முழு தகுதியுடைய கட்சி அதிமுக. மத்திய அமைச்சரவையில் இடம் பெறத் நடவடிக்கைகளை அதிமுக மேற்கொள்ளும். இருப்பினும் இது ஒரு அதிமுக தொண்டனாக என் கருத்தே தவிர அதிகாரப்பூர்வமானதல்ல. நிர்வாகக் காரணங்களுக்காக தலைமை செயலருக்கு பணிநீட்டிப்பு வழங்கப்பட்டிருக்கலாம்.

தனிஷ்க் நிறுவன விளம்பரம் நன்றாக எடுக்கப்பட்டுள்ளது. மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் அந்த விளம்பரம் எனக்கு பிடித்துள்ளது. பலரின் எதிர்வினை காரணமாக அந்நிறுவனம் விளம்பரத்தை நீக்கியுள்ளது. தமிழக அரசு அந்நிறுவனத்தின் 26% பங்குகளை வைத்திருக்கிறது. திருமணத்திற்காக மதம் மாறுவது தான் தவறு. அவரவர் அவரவர் மதத்தில் இருந்து கொண்டு திருமணம் செய்தல் சிறப்பானது.

தமிழ அரசு சார்பில் ஏப்ரல், மே ஜூன் மாதம் 31 ஆயிரம் கோடி அளவிற்கு முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. தொழில் வளர்ச்சி தமிழகத்தில் அதிக அளவில் உள்ளது. இதைப் ஏற்றுக்கொள்ள முடியாத திமுக தலைவர் மு க ஸ்டாலின் அதிமுக அரசு என்ன செய்து வருகிறது என கூட பார்க்காமல் குறை கூறி வருகிறார். இந்தியாவிலேயே தொழில் வளர்ச்சியில் முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. ஜிஎஸ்டி வரி தமிழ் நாட்டில் இருந்து அதிக அளவில் செலுத்தப்பட்டுள்ளது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் விரைவில் நலம் பெற வேண்டும்.” எனக் கூறினார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

20 எம்.எல்.ஏ. சீட்டுக்காக கல்வீச்சு போராட்டம்…பாமக மீது எழுத்தாளர் கடும் தாக்கு

வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20 சதவிகித இட ஒதுக்கீடு வேண்டும் என்று கடந்த 40 ஆண்டுகளாக போராடி வருகிறோம். இனியாவது பெற்றாக வேண்டும் என்று பாமக இன்று முதல்...

தலைகீழாக நிற்கும் அனுஷ்கா சர்மா: நிறைமாத கர்ப்பினிக்கு உதவும் விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணி்யின் கேப்டன் விராட் கோலியும் நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த 2017ல் திருமணம் செய்துகொண்டனர். இந்த காதல் தம்பதிகளுக்கு வரும் ஜனவரியில் குழந்தை பிறக்கவிருக்கிறது.

“சூரப்பா மிகவும் நேர்மையானவர்” முதல்வருக்கு ஆளுநர் கடிதம்

துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகி கடிதம் எழுதியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Do NOT follow this link or you will be banned from the site!