முதல்வர் வேட்பாளராக ஈபிஎஸ்- ஐ அறிவித்ததால் கட்சிக்குள் அதிருப்தியா?: அமைச்சர் பாண்டியராஜன்

 

முதல்வர் வேட்பாளராக ஈபிஎஸ்- ஐ அறிவித்ததால் கட்சிக்குள் அதிருப்தியா?: அமைச்சர் பாண்டியராஜன்

தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுகவில் நீடித்து வந்த முதல்வர் வேட்பாளர் சர்ச்சை முடிவுக்கு வந்திருக்கிறது. நான் தான் போட்டியிடுவேன் என ஈபிஎஸ் உடன் சண்டையிட்ட, ஓபிஎஸ்ஸே அடுத்த முதல்வர் வேட்பாளர் பழனிசாமி தான் என அறிவித்து விட்டார். அதே போல, ஓபிஎஸ் முன்வைத்த கோரிக்கையான 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்கப்படுவது நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் ஆவடியில் அமைச்சர் பாண்டியராஜன், “தொல்லியல் துறை பட்டய மேற்படிப்பில் புராதன மொழிகளில் தமிழ்மொழியை குறிப்பிடாதது குறித்து மத்திய பண்பாட்டு அமைச்சகத்திற்கு எடுத்துக்கூறி, தமிழ்மொழியும் இடம்பெற விரைவில் தீர்வு காணப்படும். ஈபிஎஸ் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தளுக்கான வியூகங்கள் வகுக்கப்பட்டு கட்சியிப்பணிகள் முடிக்கிவிடப்பட்டுள்ளது. மற்ற அனைத்து காட்சிகளையும் விட முன்னணியாக தேர்தல்பணியை அதிமுக செய்துவருகிறது. முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவித்ததில் கட்சியில் யாருக்கும் அதிருப்தியோ மன வருத்தமோ இல்லை.

முதல்வர் வேட்பாளராக ஈபிஎஸ்- ஐ அறிவித்ததால் கட்சிக்குள் அதிருப்தியா?: அமைச்சர் பாண்டியராஜன்

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் தேர்வில் குழப்பங்கள் நீடித்து வந்த சூழலில் ஈபிஎஸ் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படத்தன் மூலம் இந்த பிரச்னையில் குளிர்காய நினைத்த கட்சிகளுக்கு சம்மட்டி அடியாக இந்த அறிவிப்பு உள்ளது. குறிப்பாக திமுக அமமுக கட்சிகளுக்கு இந்த விஷயத்தில் ஏமாற்றமே கிடைத்துள்ளது” என சாடினார்.