கனமழை எதிரொலி – நீர்நிலைகளில் அமைச்சர் பாண்டியராஜன் ஆய்வு

 

கனமழை எதிரொலி – நீர்நிலைகளில் அமைச்சர் பாண்டியராஜன் ஆய்வு

சென்னை

சென்னை ஆவடி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் மற்றும் கனமழையால் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணிகளை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

கனமழை எதிரொலி – நீர்நிலைகளில் அமைச்சர் பாண்டியராஜன் ஆய்வு

நிவர் புயல் காரணமாக, ஆவடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முதல் பலத்த மழைபெய்து வருகிறது. இதனால் குடியிருப்பு பகுதிகள் உட்பட பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால், மழைநீரை வெளியேற்றும் பணியில் அரசு ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிகளை தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், மாவட்ட ஆட்சியர் பொன்னையன் மற்றும் நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன் ஆகியோர் கொட்டும் மழையில் பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

கனமழை எதிரொலி – நீர்நிலைகளில் அமைச்சர் பாண்டியராஜன் ஆய்வு

தொடர்ந்து, பருத்திப்பட்டு ஏரியில் கட்டப்பட்டு வரும் நீர் சுத்திகரிப்பு நிலையத்தையும், திருநின்றவூரில் உள்ள ஈசா பெரிய ஏரியையும் அமைச்சர் பார்வையிட்டார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ஆவடி பகுதியில் அதிகளவில் மழை பெய்தாலும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், ஆவடி பகுதியில் 27 போடி ரூபாய் செலவில் 5 இடங்களில் உபரிநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடந்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.