பாஜகவின் நிழலாகிறாரா அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்?

 

பாஜகவின் நிழலாகிறாரா அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்?

அதிமுகவில் இருக்கும் பாஜககாரர் என அமைச்சர் பாண்டியராஜனை அவ்வப்போது நெட்டிசன்கள் கலாய்ப்பார்கள். அதற்கு நியாயம் சேர்க்கும் விதமாகவே அவரின் பேச்சும் செயல்பாடுகளும் அமையும். நீட் தேர்வை வெளிப்படையாக ஆதரித்தவர்களில் பாண்டியராஜனும் ஒருவர். கடந்த வாரம் பேட்டியளித்த அவர் தேமுதிக கூட்டணியை விட்டு போனது அதிமுகவுக்கு இழப்பு இல்லை; அதைவிட பலம் வாய்ந்த பாஜக எங்கள் பக்கம் இருக்கிறது என்றார்.

File:K. Pandiarajan.jpg - Wikipedia

தமிழ்நாட்டில் பாஜகவுக்கென்று தனி செல்வாக்கு இல்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இந்த ஊரறிந்த பேருண்மை பாண்டியராஜனுக்கு தெரியாமல் போனது தான் அவர் மீதான பாஜக நிழலுக்கு காரணம். அதேபோல எஸ்வி சேகர், ஹெச். ராஜாவை கைதுசெய்ய உயர் நீதிமன்றமே உத்தரவிட்டும், அதற்கு அவசியம் இல்லை என்று சொன்னவர் தான் பாண்டியராஜன்.

பாஜகவின் நிழலாகிறாரா அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்?

பாண்டியராஜன் மீண்டும் ஆவடி தொகுதியில் களமிறங்குகிறார். மார்ச் 17ஆம் தேதி ஆவடியிலுள்ள கோயிலில் தரிசனம் செய்து தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார். மக்களிடம் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். இச்சூழலில் அவர் மீது புதிய சர்ச்சை எழுந்திருக்கிறது. அதற்குக் காரணம் அவரின் பிரச்சார நோட்டீஸ் தான். அந்த நோட்டீஸில் இருந்த வாசகங்கள் இந்தி மொழியில் இடம்பெற்றிருந்ததைக் கண்டு பொதுமக்கள் அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து விட்டார்கள்.

பாஜகவின் நிழலாகிறாரா அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்?

இந்தி திணிப்பை பல்லாண்டு காலமாக எதிர்க்கும் ஒரு மாநிலத்தின் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சராக இருந்துகொண்டு பாண்டியராஜன் இவ்வாறு நோட்டீஸ் வெளியிட்டதைக் கடுமையாகக் கண்டித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் அவர் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சரா? இந்தி வளர்ச்சி துறை அமைச்சரா? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளனர். அரசியல் ஆதாயம் பார்ப்பதற்காக தாய் மொழியை அடகு வைத்து படுகுழியில் தள்ள வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பாஜகவின் நிழலாகிறாரா அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்?

தேர்தலுக்குப் பின் ஒருவேளை அதிமுக ஆட்சியைப் பிடிக்கவில்லை என்றால் அதிமுகவில் இருக்கும் பெரும் புள்ளிகள் பாஜகவில் இணைய வாய்ப்புள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல் உலா வருகிறது. இருப்பினும், இதனை நம்பும் விதமாகவே பாஜகவும் பல மாநிலங்களில் கூட்டணியில் இருந்த கட்சிகளை விழுங்கி தரைமட்டமாக்கியிருக்கிறது. அப்படி ஒரு நிலை வந்தால் முதல் ஆளாக பாண்டியராஜன் துண்டை போடுவார் என்றும் அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.