கட்டப்படாத கல்லூரிக்கு எப்படி மாணவர் சேர்க்கை நடத்த முடியும்? – அமைச்சர் பிடிஆர் கேள்வி

 

கட்டப்படாத கல்லூரிக்கு எப்படி மாணவர் சேர்க்கை நடத்த முடியும்? – அமைச்சர் பிடிஆர் கேள்வி

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை இன்னும் கட்டப்படாமல் உள்ளது. 2019ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டதே தவிர எந்த கட்டுமானப் பணியும் தொடங்கப்படவில்லை. அண்மையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் மருத்துவம் படிக்க 150 மாணவர்களை சேர்க்கலாம் என்றும் கல்லூரிக்கான கட்டிடம் இல்லாத பட்சத்தில் வகுப்புகளை வேறு இடத்தில் தொடங்கலாம் என்றும் மாணவர்கள் படித்து முடிக்கும் போது எய்ம்ஸ் வளாகத்தில் கல்லூரி கட்டி முடிக்கப்படும். பிறகு இடமாற்றம் செய்து கொள்ளலாம் என்றும் மாநில அரசுக்கு மத்திய பாஜக அரசு கடிதம் அனுப்பியது.

கட்டப்படாத கல்லூரிக்கு எப்படி மாணவர் சேர்க்கை நடத்த முடியும்? – அமைச்சர் பிடிஆர் கேள்வி

இந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்ள தமிழக அரசு மறுத்துள்ளது. மத்திய அரசின் ஒவ்வொரு செயலுக்கும் எதிர் நிலை தெரிவித்து போராடி கொண்டு இருந்தால் மக்கள் நலன் பாதிக்கப்படும் என்பதை உணர்ந்து மோதல் போக்கை கைவிட்டு உடனடியாக 150 ஏழை, எளிய மாணவர்களை மருத்துவக் கல்வி பயில நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இல்லாத கல்லூரிக்கு எப்படி மாணவர் சேர்க்கை நடத்த முடியும் என திமுகவின் முக்கியப் புள்ளிகள் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில், கட்டப்படாத எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எப்படி மாணவர் சேர்க்கை நடத்த முடியும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மதுரை எய்ம்ஸ் கல்லூரிக்கு நிதியும் ஒதுக்கவில்லை. கட்டிடமும் கட்டவில்லை. மாணவர் சேர்க்கையை நடத்துமாறு அண்ணாமலை கூறுகிறார். கட்டப்படாத கல்லூரிக்கு எப்படி மாணவர் சேர்க்கை நடத்த முடியும் என்று தெரிவித்தார்.