மக்களிடம் வரி வாங்கி அரசை ஏமாற்றும் ஜவுளி கடைகள்… ரெய்டு தொடரும் என அமைச்சர் எச்சரிக்கை!

மக்களிடம் வரி வாங்கி அரசை ஏமாற்றும் ஜவுளி கடைகள்… ரெய்டு தொடரும் என அமைச்சர் எச்சரிக்கை!

ஜவுளிக் கடைகள் விற்பனை மற்றும் கொள்முதலைக் குறைத்துக் காட்டி போலியான ஆவணங்கள் மூலம் குறைவான வரியைக் கட்டியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த புகாரின் அடிப்படையில் சென்னையில் 39 கடைகள், நெல்லையில் 15 கடைகள், கோவை, மதுரையில் தலா 13 கடைகள் எனத் தமிழகம் முழுவதும் 130க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று மாலை வணிகவரித் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

மக்களிடம் வரி வாங்கி அரசை ஏமாற்றும் ஜவுளி கடைகள்… ரெய்டு தொடரும் என அமைச்சர் எச்சரிக்கை!

குறிப்பாக சென்னை சில்க்ஸ், ஆர்.எம்.கே.வி., போத்தீஸ், நல்லி சில்க்ஸ் உள்ளிட்ட பிரபல கடைகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இதுதொடர்பாக வணிகவரித் துறை அமைச்சர் பி.ராமமூர்த்தி விளக்குகையில், “தமிழக வணிக வரித்துறை வரலாற்றிலே எப்போதும் இல்லாத வகையில் 103 ஜவுளிக் கடைகளில் வணிக வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இது தொடரும். தனியார் நிறுவனங்கள் மக்களிடம் வரிப் பணத்தை வாங்கிக் கொண்டு அரசுக்குச் செலுத்தாமல் உள்ளன. தொழில் செய்பவர்கள், பொருள் வாங்குவதற்கும், விற்பதற்கும் வரி கட்ட வேண்டும்.

மக்களிடம் வரி வாங்கி அரசை ஏமாற்றும் ஜவுளி கடைகள்… ரெய்டு தொடரும் என அமைச்சர் எச்சரிக்கை!

ஆனால், மக்கள் கட்டக்கூடிய ஜிஎஸ்டி வரியை அரசுக்குச் செலுத்தாமல் ஏமாற்றுகின்றனர். அந்த புகாரின் அடிப்படையிலேதான் ஜவுளி நிறுவனங்களில் ஆய்வு நடந்தது. இன்னும் 3 நாட்கள் அந்த ஆய்வு நடக்கும். அதன்பிறகு அதற்கான தீர்வை வணிக வரித்துறை முடிவெடுக்கும். தொழில் செய்பவர்கள் அரசுக்குச் செலுத்த வேண்டிய வரியை, நேர்மையாகவும் முறையாகவும் செலுத்த வேண்டும்” என்றார்.