அமைச்சர் ஓஎஸ் மணியன் மனைவி மறைவு : மு.க. ஸ்டாலின் இரங்கல்!

 

அமைச்சர் ஓஎஸ் மணியன் மனைவி மறைவு : மு.க.  ஸ்டாலின் இரங்கல்!

தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மனைவி கலைச்செல்வி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அமைச்சர் ஓஎஸ் மணியன் மனைவி மறைவு : மு.க.  ஸ்டாலின் இரங்கல்!

இந்நிலையில் ஓ. எஸ். மணியன் மனைவி மறைவுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், “அமைச்சர் ஓ. எஸ். மணியன் அவர்களின் மனைவி திருமதி. கலைச்செல்வி மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு வேதனை அடைந்தேன்.

திரு.ஓ.எஸ்.மணியன் அவர்களை தொலைபேசியில் அழைத்து எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தேன். அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.