“திமுகவை விட அதிக தொல்லை தினகரனால் தான்” : அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

 

“திமுகவை விட அதிக தொல்லை தினகரனால் தான்” :  அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

அதிமுகவிற்கு திமுகவை விட அதிக தொல்லை கொடுத்தது தினகரன் கட்சி தான் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.

“திமுகவை விட அதிக தொல்லை தினகரனால் தான்” :  அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா கடந்த 27ஆம் தேதி விடுதலையானார். இதை தொடர்ந்து பெங்களூருவில் சொகுசு விடுதியில் ஓய்வெடுத்து வந்த அவர் இன்று சென்னை வந்தடைந்தார் . பெங்களூருவில் இருந்து நேற்று காலை புறப்பட்ட சசிகலாவுக்கு அதிமுக மற்றும் அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த சூழலில் அதிமுகவையும், இரட்டை இலையையும் மீட்க சசிகலா சட்டப் போராட்டம் நடத்துவார் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதேபோல் அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலா தான். அதனால் கட்சியிலிருந்து ஒருவரை நீக்குவதற்கும், பொதுக்குழு கூட்டுவதற்கும் சசிகலாவுக்கு தான் உரிமை உள்ளது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

“திமுகவை விட அதிக தொல்லை தினகரனால் தான்” :  அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

இந்நிலையில் நாகப்பட்டினம் வேதாரண்யத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன், “அதிமுகவிற்கு திமுகவை விட அதிக தொல்லை கொடுத்தது தினகரன் கட்சி தான். தனிக்கொடி, தனிச் சின்னம் ,தனிப் பாதை, தனிக்கட்சி என அதிக தொல்லை கொடுத்தார் தினகரன். தனி கொடியோடு ,தனி சின்னத்தில் போட்டியிட்ட டிடிவி அதிமுகவை சொந்தம் கொண்டாட கூடாது. எதையும் சந்திக்க தயார் என்ற சூழலில்தான் முதல்வர் ஆட்சி நடத்தி வருகிறார். தொண்டர்கள் என்ன நினைக்கிறார்களோ, என்ன விரும்புகிறார்களோ அதை தலைமை தான் முடிவு செய்யும் ” என்றார்.