5 ஆண்டுகளில் 58 நாடுகளுக்கு பயணம்… ரூ.517 கோடி செலவு.. மோடியின் வெளிநாட்டு பயணம் குறித்து மத்திய அரசு

5 ஆண்டுகளில் 58 நாடுகளுக்கு பயணம்… ரூ.517 கோடி செலவு.. மோடியின் வெளிநாட்டு பயணம் குறித்து மத்திய அரசு

பிரதமர் மோடி கடந்த 5 ஆண்டுகளில் 58 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் கொண்டார். அதற்காக ரூ.517 கோடி செலவானதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் தொடர்பான கேள்விக்கு வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.முரளீதரன் அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில், 2015 மார்ச் முதல் 2019 நவம்பர் வரையிலான காலத்தில் பிரதமர் நரேந்திர மோடி மொத்தம் 58 நாடுகளுக்கு சென்று வந்துள்ளதாகவும், பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்காக மொத்தம் ரூ.517.82 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 ஆண்டுகளில் 58 நாடுகளுக்கு பயணம்… ரூ.517 கோடி செலவு.. மோடியின் வெளிநாட்டு பயணம் குறித்து மத்திய அரசு
பிரதமர் மோடி

மேலும், அந்த காலத்தில் எந்தெந்த நாடுகளுக்கு மோடி சென்றார் என்ற பட்டியலிலும், வெளிநாட்டு பயணத்தின்போது இந்தியா கையெழுத்திட்ட ஒப்பந்தங்கள் குறித்து விவரங்களும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணம், வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், கடல்சார், விண்வெளி மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்பட பல்வேறு துறைகளில் வெளிநாடுகளுடனான இந்திய உறவுகளை பலப்படுத்தியுள்ளது என முரளீதரன் தெரிவித்தார்.

5 ஆண்டுகளில் 58 நாடுகளுக்கு பயணம்… ரூ.517 கோடி செலவு.. மோடியின் வெளிநாட்டு பயணம் குறித்து மத்திய அரசு
காங்கிரஸ்

எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களை அடிக்கடி விமர்சனம் செய்து வந்தன. சுய ஊக்குவிப்பு மற்றும் செல்பிகளுக்காக பிரதமர் மோடி வெளிநாட்டு பயணங்களுக்கு பொதுமக்களின் பணத்தை செலவிடப்படுவதாக எதிர்க்கட்சிகள் மீண்டும் மீண்டும் குற்றம்சாட்டின. மேலும் முன்னதாக பிரதமர் மோடியை என்.ஆர்.ஐ. பிரதமர் என காங்கிரஸ் கிண்டல் செய்தது குறிப்பிடத்தக்கது.