கிசான் முறைகேட்டுக்கு மத்திய அரசு தான் காரணம்: அமைச்சர் ஓஎஸ் மணியன் தடாலடி!

 

கிசான் முறைகேட்டுக்கு மத்திய அரசு தான் காரணம்: அமைச்சர் ஓஎஸ் மணியன் தடாலடி!

தமிழகத்தில் கிசான் திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதற்கு மத்திய அரசு தான் காரணம் என அமைச்சர் ஓஎஸ் மணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு கடன் வழங்கும் கிசான் திட்டத்தில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மோசடி நடந்திருப்பது அம்பலமானது. அதாவது, விவசாயிகள் அல்லாதவர்களுக்கு கடன் வழங்கப்படுவதாகவும் உண்மையான விவசாயிகளுக்கு கடன் வழங்கப் படுவதில்லை என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருச்சி மற்றும் சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மோசடி நடந்திருப்பதால், இது தொடர்பான விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

கிசான் முறைகேட்டுக்கு மத்திய அரசு தான் காரணம்: அமைச்சர் ஓஎஸ் மணியன் தடாலடி!

அதே போல, முறைகேடாக கடன் பெற்றவர்களின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருப்பி வசூலிக்கப்பட்டு வருகிறது. கள்ளகுறிச்சி மாவட்டத்தில் முறைகேடு செய்தவர்களிடம் இருந்து ரூ.6கோடிக்கு மேல் வசூலிக்கப்பட்டதாகவும் விழுப்புரத்தில் ரூ.5 கோடிக்கு மேல் வசூலிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைக்கண்ணு, முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

கிசான் முறைகேட்டுக்கு மத்திய அரசு தான் காரணம்: அமைச்சர் ஓஎஸ் மணியன் தடாலடி!

இந்த நிலையில் கிசான் திட்ட முறைகேட்டுக்கு மத்திய அரசு தான் காரணம் என மதுரையில் பேட்டியளித்த அமைச்சர் ஓஎஸ் மணியன் தெரிவித்துள்ளார். விவசாயிகள் மட்டும் அல்லாது கால்நடை வைத்திருப்பவர்கள், மீனவர்களும் இந்த திட்டத்தில் பயனடைந்துள்ளதாகவும் பாஸ்வேர்டு லீக் ஆனதால் நடந்த முறைகேட்டை சரி செய்து விடலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.