அமைச்சரின் பெயரையே மாற்றிய திமுகவினர்!

 

அமைச்சரின் பெயரையே மாற்றிய திமுகவினர்!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனரில் தமிழக சுற்றுலா துறை அமைச்சர் பெயர் தவறாக இடம் பெற்ற போதிலும் பல மாதங்கள் ஆகியும் இதுவரை பெயர் மாற்றம் செய்யப்படவில்லை.

அமைச்சரின் பெயரையே மாற்றிய திமுகவினர்!

தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி கடந்த 7ஆம் தேதி பதவியேற்றது. முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் 34 அமைச்சர்கள் பதவியேற்று தமிழகம் முழுவதும் அரசு சார்ந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து நான்கு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்ற போதிலும் ராசிபுரம் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த மதிவேந்தன் சுற்றுலாத்துறை அமைச்சராக பொறுப்பேற்று அரசு சார்ந்த பணிகளை மேற்கொண்டுவருகிறார்.

இந்த சூழலில் அவரை வரவேற்கும் வகையில் நாமக்கல் மாவட்டம் முழுவதும் அவரது ஆதரவாளர்கள், திமுக நிர்வாகிகள், திமுக தொண்டர்கள் என அமைச்சரை பெருமை சேர்க்கும் வகையில் பெரிய அளவில் விளம்பர பேனர்களை வைத்துள்ளனர். பள்ளிபாளையம் நான்குவழிச் சாலை சந்திப்பில் மூன்று அடுக்கு மாடி கொண்ட கட்டுமானத்தின் மீது வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனரில் அமைச்சரின் பெயர் மதி ந்தன் என்பதற்கு பதிலாக மதிவாணன் என இடம்பெற்றுள்ளது. இந்த விளம்பர பேனர் கடந்த ஒரு மாதமாக இருக்கும் நிலையில் இதுவரை பெயர் திருத்தம் மேற்கொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றன..