பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரியில் கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டிடம்… அமைச்சர் முத்துசாமி அடிக்கல் நாட்டினார்…

 

பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரியில் கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டிடம்… அமைச்சர் முத்துசாமி அடிக்கல் நாட்டினார்…

ஈரோடு

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கொரோனா நோயாளிகளுக்கு கூடுதல் படுக்கைகள் அமைப்பதற்கான புதிய கட்டிடத்திற்கு அமைச்சர் முத்துசாமி அடிக்கல் நாட்டினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி கொரோனா ஏற்பட்டவர்களுக்காக முழுமையாக இயங்குவதாகவும், இங்கு அண்டை மாவட்டங்களில் இருந்தும் நோயாளிகள் சிகிச்சைக்கு வருவதால், கூடுதல் படுக்கை வசதி கட்டிட பணிகள் தொடங்கி உள்ளதாகவும் கூறினார். இங்கு முதற்கட்டமாக 300 படுக்கைகளும் பின்னர் படிப்படியாக 1000 படுக்கைகள் அமைக்கப்பட உள்ளதாகவும் கூறினார்.

மேலும், இந்த கட்டிடத்தில் கொரோனா பரிசோதனை, சிகிச்சை மற்றும் தடுப்பூசி செலுத்துவதற்கென பிரத்யேகமாக 3 மையங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். இதில் நோயாளிகளுக்கு அனைத்து அடிப்படை வசதிகளுடன் மிகச்சிறந்த சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விரைவில் இந்த பணிகள் நிறைவேற்றப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரியில் கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டிடம்… அமைச்சர் முத்துசாமி அடிக்கல் நாட்டினார்…

தொடர்ந்து பேசிய அவர், கொரோனா நோயாளிகளுக்கென ஈரோடு அரசு மருத்துவமனையில் 150 படுக்கைகளும், பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவக்கல்லூரியில் 550 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார். எஞ்சிய அரசு மருத்துவமனைகள், வட்டார மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவை பொது நோயாளிகளுக்கு மட்டும் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், ஈரோடு மாவட்டத்தில் 24 மணிநேரமும் இயங்கும் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் (வார் ரூம்) அமைக்கப்பட்டு உள்ளதாகவும், இங்கு அரசு – தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகள், ஆக்ஸிஜன் தேவை மற்றும் அரசு மருத்துவ காப்பீட்டு திட்டம் தொடர்பான சந்தேகங்களுக்கு, பொதுமக்கள் தொடர்புகொண்டு விளக்கம் பெறலாம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.