காவல்துறையினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய, அமைச்சர் முத்துசாமி!

 

காவல்துறையினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய, அமைச்சர் முத்துசாமி!

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் பணிபுரியும் காவல் துறையினருக்கு வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி இன்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

ஈரோடு மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, ஆணைக்கல் பாளையத்திலுள்ள ஆயுதப்படை வளாகத்தில் இன்று நடைபெற்றது. ஈரோடு மாவட்ட எஸ்.பி. தங்கதுரை தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், வீட்டு வசதிசத்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்துகொண்டு, காவலர்களுக்கு அரிசி, முக கவசம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி, பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முன்கள பணியாளர்களுக்கென தனியாக 10 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை 289 போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

காவல்துறையினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய, அமைச்சர் முத்துசாமி!

கொரோனா தடுப்பூசி குறைந்த அளவே வந்துள்ளதால், மாவட்டத்தில் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ள பகுதிகளுக்கும், மக்கள் தொகை அதிகமுள்ள இடங்களுக்கும் முக்கியத்துவம் அளித்து தடுப்பூசி வழங்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், ஈரோடு அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் உட்பட அனைவரும் ஒரே வழியை பயன்படுத்துவதால், மற்றவர்களுக்கும் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்

எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா நோயாளிக்கென அரசு மருத்துவமனையில் தனி வழி மற்றும் தனி வார்டுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.