விஜயகாந்த்துடன் அமைச்சர்கள் கூட்டணி பேச்சுவார்த்தை!

 

விஜயகாந்த்துடன் அமைச்சர்கள் கூட்டணி பேச்சுவார்த்தை!

சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் சூழலில் தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக -அதிமுக கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். அதேசமயம் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக இருப்பது உறுதியாகியுள்ள நிலையில் தேமுதிக இழுபறியில் உள்ளது. தேமுதிக 40 சீட்டுகளுக்கு மேல் கேட்டு அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிகிறது. அதிமுக தலைவர்களைத் தேமுதிக சார்பில் யாரும் சந்திக்காமல் இருந்து வந்தனர். மேலும் அதிமுக தலைமை மீது பிரேமலதா விஜயகாந்த் அதிருப்தியில் இருந்து வந்தார். பாமகவுக்கு கொடுக்கும் அங்கீகாரம் தேமுதிகவுக்கு வழங்கப்படவில்லை என தெரிகிறது.

விஜயகாந்த்துடன் அமைச்சர்கள் கூட்டணி பேச்சுவார்த்தை!

இந்நிலையில் சட்டசபைத் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக விஜயகாந்த் உடன் அமைச்சர்கள் சந்திந்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். விஜயகாந்த் உடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி சந்திப்பில் ஈடுபட்டுள்ளனர். பாமக உடன் தொகுதி பங்கீடு முடிந்த நிலையில் தேமுதிக உடன் அதிமுக பேச்சுவார்த்தை விரைவில் தொகுதி பங்கீடு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் பற்றி ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.