ராமசாமி படையாட்சியார் மணிமண்டபத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத் மாலை அணிவித்து மரியாதை

ராமசாமி படையாட்சியார் மணிமண்டபத்தில்  அமைச்சர் எம்.சி.சம்பத் மாலை அணிவித்து மரியாதை

மறைந்த சுதந்திர போராட்ட வீரரும், காமராஜர் அமைச்சரவையில் இருந்தவருமான ராமசாமி படையாட்சியாரின் பிறந்தநாளை அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.

ராமசாமி படையாட்சியார் மணிமண்டபத்தில்  அமைச்சர் எம்.சி.சம்பத் மாலை அணிவித்து மரியாதை

காமராஜர் ஆட்சியில் 1954-ல் உள்ளாட்சித்துறை அமைச்சராகவும், பிறகு மக்களவை காங்கிரஸ் உறுப்பினராகவும் பணியாற்றிய எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் 103-வது பிறந்தாளில் கடலூரில் உள்ள மணி மண்டபத்தில் ராமசாமி படையாட்சியார் உருவ சிலைக்கு தமிழக தொழில்துறை அமைச்சர் எம் .சி .சம்பத் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சகா மூறி மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபிநவ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

ராமசாமி படையாட்சியார் மணிமண்டபத்தில்  அமைச்சர் எம்.சி.சம்பத் மாலை அணிவித்து மரியாதை

காமராஜர் தலைமையில் அமைந்த ஆட்சி மூலமாக அமைச்சரவையில் பொறுப்பேற்று சமூக நீதி கொள்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் உழைப்பாளர் கட்சியை காங்கிரஸ் கட்சியோடு இணைத்தவர் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார். பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின் உரிமைகளுக்காக இட ஒதுக்கீடு பெறுவதற்கு தமது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சி.

ராமசாமி படையாட்சியார் மணிமண்டபத்தில்  அமைச்சர் எம்.சி.சம்பத் மாலை அணிவித்து மரியாதை