”தமிழகத்தில் கொரோனா 3வது அலை நவம்பரில் வர வாய்ப்பு”

 

”தமிழகத்தில் கொரோனா 3வது அலை நவம்பரில் வர வாய்ப்பு”

புனேவில் இருந்து விமானம் மூலம் 3,65,800 லட்சம் கோவீஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னை தேனாம்பேட்டையில் டிஎம்எஸ் வளாகத்துக்கு இன்று வந்தடைந்தது. அதனை மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து பெற்றுக் கொண்டனர்.

”தமிழகத்தில் கொரோனா 3வது அலை நவம்பரில் வர வாய்ப்பு”

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது, தமிழகத்தில் தற்போது 50 ஆயிரம் படுக்கைகள் காலியாக உள்ளது. அதில் 23 ஆயிரம் ஆக்ஸிஜன் படுக்கைகள், 2509 தீவிர படுக்கைகள் காலியாக உள்ளது. தமிழகத்தில் மூன்றாவது அலை நவம்பர் மாதத்தில் வருவதற்கான வாய்ப்பு உள்ளது என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதனை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது.

கொரோனா தடுப்பூசி 1கோடியே 2லட்சம் 49 ஆயிரம் வந்தது அதில் 97ஆயிரம் 650 தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 88 ஆயிரம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. அவை அனைத்து மாவட்டத்திற்கும் பிரித்து அனுப்பப்படும்
இதுவரை 1 கோடி நபர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் தற்போது 1,299 நபர்களுக்கு கரும் பூஞ்சை உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என தெரிவித்தார்.