இன்னும் 2 மாதங்களில் புகையிலை இல்லா தமிழகம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

 

இன்னும் 2 மாதங்களில் புகையிலை இல்லா தமிழகம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னையில் ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு கழகம்,காவல் துறை மற்றும் உள்ளாட்சி துறைகளுடனான ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குட்கா, பான் பராக் போன்ற உயிர்கொல்லி போதை பொருட்களின் மீதான தடையை கடுமையாக்குவது பற்றி விவாதிக்கப்பட்டது.

Image

இதில் கலந்துகொண்டு பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “குட்கா, பான்பராக் விற்பனையை முழுமையாக ஒழிக்கும் மாவட்ட அதிகாரிகளுக்கு முதலமைச்சர் கைகளால் சான்ரிதழ் வழங்கி கவுரவிக்கப்படும். கள ஆய்வுக்கு செல்லும்போது கடைகளில் குட்கா பான்பராக் விற்பது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும்.

தமிழ்நாடு 2 மாதங்களில் புகையிலை இல்லா மாநிலம் என்ற நிலை எட்டப்படும். வியாபாரிகளை குட்கா போன்ற போதை பொருட்களை விற்கமாட்டோம் என உறுதிமொழி ஏற்க செய்யவேண்டும். பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே போதைப்பொருட்களால் ஏற்படும் தீங்குகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தவும் வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 50 இடங்களிலாவது விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படவேண்டும்

இதுவரை 2,00,05,367 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. 1,11,026 மாற்றுத்திறனாளிக்கு முழுவதுமாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. 79,585 கர்ப்பிணிகளுக்கும், 73,726 பாலூட்டும் தாய்மார்களுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.” எனக் கூறினார்.