மனசாட்சி உள்ளவர்கள் யாரும் இதை செய்யமாட்டார்கள்! அமைச்சர் மா.சு

 

மனசாட்சி உள்ளவர்கள் யாரும் இதை செய்யமாட்டார்கள்! அமைச்சர் மா.சு

மதுரையில் கொரோனோ தடுப்பு நடவடிக்கை குறித்து சுகாதார துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில், மதுரை மாவட்டத்தில் கொரோனோ பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கொரோனோ பரவலை கட்டுப்படுத்துவது, கொரோனோ பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சை அளிப்பது, ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. மருத்துவம் மற்றும் சுகாதார துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, ஆட்சியர் அன்பழகன், நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.

மனசாட்சி உள்ளவர்கள் யாரும் இதை செய்யமாட்டார்கள்! அமைச்சர் மா.சு

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்கவும், மேலும் பரவாமல் தடுக்க தமிழக முதல்வர் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார்.. மாவட்டந்தோறும் சென்று ஆய்வு மேற்கொண்டுவருகிறோம். ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 150 படுக்கை வசதிகள் கூடுதலாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அமைக்கப்படும். கொரோனா முதல் அலையில் மருத்துவ கட்டமைப்பை சீராக செய்திருந்தால் 2ம் அலையில் இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டிருக்காது. மனச்சாட்சி உள்ளவர்கள் ரெம்டெசிவிர் மருந்தை கள்ள சந்தையில் விற்பனை செய்ய மாட்டார்கள் அப்படி தவறு நடக்கும் பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.