தடுப்பூசிகளில் எது சிறந்தது என பாகுபாடு பார்க்காதீர்கள்- மா.சுப்ரமணியன்

 

தடுப்பூசிகளில் எது சிறந்தது என பாகுபாடு பார்க்காதீர்கள்- மா.சுப்ரமணியன்

அயனாவரத்தில் உள்ள இஎஸ்ஐ அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியம், “இஎஸ்ஐமருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் பயன்பெறும் வகையில் 400 படுக்கை வசதிகள் உள்ளது. கடந்த மாதம் 400 படுக்கைகளும் நிரம்பி வழிந்த நிலையில் தற்போது 50 நோயாளிகள் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். இஎஸ்ஐ மருத்துவமனையின் மூலம் அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் பயன்பெற்று வருகின்றனர். நோய்தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருக்கிறது.

தடுப்பூசிகளில் எது சிறந்தது என பாகுபாடு பார்க்காதீர்கள்- மா.சுப்ரமணியன்

மூன்றாவது அலையை சமாளிக்க தற்போது தமிழக அரசு தயாராக இருக்கிறது. அனைத்து மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கு என தனியாக படுக்கைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. இஎஸ்ஐ மருத்துவமனையில் 75 படுக்கைகளும் எழும்பூர் மருத்துவமனையில் தற்போது 250 படுகைகளும் தயார் செய்யப்பட்டு வருகிறது. தமிழக முதலமைச்சரின் சார்பில் மாதத்திற்கு இரண்டு கோடி தடுப்பூசிகள் மத்திய அரசிடம் கேட்கப்பட்டுள்ளது.

ஸ்புட்னிக் தடுப்பூசி தான் சிறந்தது என்று மக்கள் யாரும் கூறவில்லை. தடுப்பூசிகளிடையே பாகுபாட்டை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டாம். கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதம் பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். நீரிழிவு ,ரத்த அழுத்தம், உடல் பருமன் உள்ளிட்ட நோய்களுடன் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களே அதிகமாக கொரோனாவால் இறந்துள்ளனர்” எனக் கூறினார்.