கருப்பு பூஞ்சைக்கான மருந்துக்கு தட்டுப்பாடு- அமைச்சர் மா.சுப்ரமணியன்

 

கருப்பு பூஞ்சைக்கான மருந்துக்கு தட்டுப்பாடு- அமைச்சர் மா.சுப்ரமணியன்

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ” டிரைவ் த்ரூ ” என்ற தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

கருப்பு பூஞ்சைக்கான மருந்துக்கு தட்டுப்பாடு- அமைச்சர் மா.சுப்ரமணியன்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகள் மூலம் ஒரு லட்சம் நபர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டுள்ளது. மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தடுப்பூசிகள் தற்போது கிடைத்துவருகிறது. அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் கருப்பு பூஞ்சைக்கான மருந்து தட்டுப்பாடு இருப்பது உண்மைதான். அதற்கு இணை மருந்தினை ஆராய்ந்து வருகிறோம். அதற்கான அறிவிப்பு இரண்டொரு நாட்களில் வெளியிடப்படும். மத்திய அரசு தடுப்பூசி செலுத்துவதற்காக நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டும். அதிகப்படியான கட்டணங்கள் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனா பேரிடர் காலகட்டம் என்பதால் பிற நோய்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கான தட்டுப்பாடு உள்ளது, அவசரகதியில் வருபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது” என தெரிவித்தார்.