கொரோனா குவாரன்டைன் விதியை மீறிய அமைச்சர் கே.பி.அன்பழகன்! – பீதியில் அதிகாரிகள்

 

கொரோனா குவாரன்டைன் விதியை மீறிய அமைச்சர் கே.பி.அன்பழகன்! – பீதியில் அதிகாரிகள்

கொரோனா சிகிச்சை முடித்து டிஸ்சார்ஜ் ஆன உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழன் உடனடியாக அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்றதன் மூலம் கொரோனா சுய தனிமைப்படுத்திக் கொள்ளுதல் விதியை மீறிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று நேற்று காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கொரோனா நோய் பாதிப்பிலிருந்து மீண்டாலும் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டும் என்பது அரசு விதியாக உள்ளது.

கொரோனா குவாரன்டைன் விதியை மீறிய அமைச்சர் கே.பி.அன்பழகன்! – பீதியில் அதிகாரிகள்ஆனால், அமைச்சர் அன்பழகன் நேற்று மாலை அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார். கிண்டி பிர்லா கோளரங்கத்தில் நடந்த பொறியியல் மாணவர் கலந்தாய்வு தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்று நிருபர்களுக்கு பேட்டி வேறு அளித்தார்.
அப்போது உடல்நலம் பற்றி நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பியபோது, “நான் நலமாக இருக்கிறேன். எந்த பிரச்னையும் இல்லை” என்றார். பொதுவாக கொரோனா நோயாளிகளுக்கு மீண்டும் பரிசோதனை செய்வது இல்லை.

கொரோனா குவாரன்டைன் விதியை மீறிய அமைச்சர் கே.பி.அன்பழகன்! – பீதியில் அதிகாரிகள்

பாஸிடிவ் என்று கண்டறிந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்கள் உடல் நலம் முன்னேறிவிட்டாலே கொரோனா போய்விட்டது என்று கூறி அனுப்பிவிடுகின்றனர். அமைச்சர் என்பதால் அவருக்கு டிஸ்சார்ஜ் செய்யப்படுவதற்கு முன்னதாக கொரோனா பரிசோதனை செய்திருக்கலாம். இருப்பினும் அவர் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றதால் அவர் மூலமாக மற்றவர்களுக்கு கொரோனாத் தொற்று வந்துவிடுமோ என்ற அச்சம் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
ஸ்டாலின் வீடியோ கான்பரன்சில் மாஸ்க் அணியாததை பிரச்னையாக்கிய அ.தி.மு.க-வினர், அமைச்சர் குவாரன்டைன் விதியை மீறி வந்தது பற்றி விளக்கம் அளிப்பார்களா என்று தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.