பெங்கல் விழாவிற்கு மாட்டு வண்டியில் வருகை தந்த அமைச்சர் கே.சி.வீரமணி…

 

பெங்கல் விழாவிற்கு மாட்டு வண்டியில் வருகை தந்த அமைச்சர் கே.சி.வீரமணி…

திருப்பத்தூர்

திருப்பத்தூரில் நடந்த பொங்கல் விழாவில் அமைச்சர் கே.சி.வீரமணி பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் வருகை தந்த நிகழ்வு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சுற்றுலாத் துறையின் சார்பாக இன்று பொங்கல் விழா நடைபெற்றது. இதனையொட்டி, வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, மாவட்ட ஆட்சியர் சிவனருள் மற்றும் மாவட்ட எஸ்.பி. விஜயகுமார் ஆகியோர் விழா அரங்கத்திற்கு காளைகள் பூட்டி மாட்டு வண்டியில், தாரை தப்பட்டைகள் முழங்க, கலை நிகழ்ச்சிகளுடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு வரவேற்கப்பட்டனர். தொடர்ந்து, இந்த நிழ்ச்சியில் தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரங்களை நினைவு கூறும் வகையில், பள்ளி மாணவ, மாணவிகள் மயில் ஆட்டம், சிலம்பாட்டம், கரகம், தெருக்கூத்து, தப்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை செய்து காட்டி அசத்தினர்.

பெங்கல் விழாவிற்கு மாட்டு வண்டியில் வருகை தந்த அமைச்சர் கே.சி.வீரமணி…

இந்த பொங்கல் விழாவில் மாற்றுத் திறனாளிகள், மனநலம் குன்றியவர்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு நிகழ்ச்சிகளை பார்த்து ரசித்தனர். தொடர்ந்து கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.சி.வீரமணி, திருப்பத்தூர் மாவட்டம் உதயமாகி முதன்முறையாக நடக்கும் இந்த பொங்கல் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைவதாக கூறினார். மேலும், பழமை வாய்ந்த கலாச்சாரத்தை புதுமையாக கொண்டாடும் இந்த நாளில் அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்.