“அமராவதி ஆற்றில் சாயக் கழிவுகள் கலப்பது இல்லை” – அமைச்சர் கே.சி.கருப்பணன்

 

“அமராவதி ஆற்றில் சாயக் கழிவுகள் கலப்பது இல்லை” – அமைச்சர் கே.சி.கருப்பணன்

ஈரோடு

அமராவதி ஆற்றில் சாய சலவை ஆலைகளின் கழிவுகள் கலப்பது இல்லை என்று தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார். ஈரோடு மவாட்டம் பவானி அடுத்த மயிலம்பாடி பகுதியில் 26 கோடி ரூபாய் மதிப்பிலான, அடுக்கு மாடி குடியிருப்பு கட்டும் பணியினை அமைச்சர் கே.சி.கருப்பணன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமராவதி ஆற்றின் கரையில் சாய சலவை ஆலைகள் செயல்படவில்லை என்றும், கரூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து சாய சலவை ஆலைகளும் கழிவுநீர் சுத்திகரிப்பு இயந்திரத்துடன் செயல்படுவதாகவும் தெரிவித்தார்.

“அமராவதி ஆற்றில் சாயக் கழிவுகள் கலப்பது இல்லை” – அமைச்சர் கே.சி.கருப்பணன்

இருப்பினும் அமராவதி ஆற்றில் சாய சலவை ஆலை கழிவுகள் கலப்பது தொடர்பாக, மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார். தமிழக நீர்நிலைகளில் பெரிய அளவில் மாசு ஏற்படுத்தும் நிலை தற்போது இல்லை என்று கூறிய அமைச்சர் கே.சி.கருப்பணன், அவ்வாறு நீர்நிலைகளை மாசுபடுத்துவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுப்பது குறித்து எதிர்காலத்தில் முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.