Home அரசியல் “கருணாநிதி பரம்பரைக்கே முதல்வராகும் அதிர்ஷ்டம் கிடையாது”

“கருணாநிதி பரம்பரைக்கே முதல்வராகும் அதிர்ஷ்டம் கிடையாது”

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அய்யம்பாளையத்தில் அதிமுக புதிய கட்சி அலுவலகத்தை சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பணன் திறந்து வைத்தார்.

தொடர்ந்து விழாவில் பேசிய அமைச்சர் கருப்பணன், “அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் பல புதிய திட்டங்களை அறிவிக்க இருக்கிறோம். விவசாயிகளின் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யப்படும். கருணாநிதி பரம்பரைக்கே முதலமைச்சர் ஆகும் அதிர்ஷ்டம் கிடையாது. இந்த கருப்பணன் கமிஷனுக்காக வேலை செய்திருந்தால் எங்கேயோ போயிருப்பேன்.

எனக்கு 67 வயது ஆகிறது எத்தனையோ பேரை நான் பார்த்துள்ளேன், கெடுவான் கேடு நினைப்பான், செய்தி சேனங்களை பாருங்கள் சன் டிவியை நான் பாா்ப்பதே இல்லை. அதில் வரும் நிகழ்ச்சிகள் குடும்பத்தினருடன் பாா்க்கும் அளவுக்காக உள்ளது. பிக்பாஸ் மானாட மயிலாட போன்ற நிகழ்ச்சிகள் பார்த்தால் குடும்பம் வீணாய் போயிவிடும். பிக்பாஸ் நிகழ்ச்சியை நான் பார்ப்பதில்லை. சில செய்தி சேனல்கள் மக்களை திசை திருப்புகின்றன.

Minister KP Karuppanan

அதிமுகவிற்கு வாக்களித்தால் தமிழகத்தில் எந்த பிரச்சினையும் இருக்காது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆல்பாஸ் வழங்கப்பட்டதால் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளனர். இதனால் எனது கல்லூரியில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். தமிழகத்தில் அனைத்து தொகுதிகளும் தன்னிறைவு தொகுதியாக மாற்றப்படும். தமிழ்நாடு மட்டும் இந்திய அளவில் அல்ல உலகளவில் பணக்கார பட்டியலில் இடம் பிடித்தது. எப்படி திருட்டு ரயில் ஏறிவந்த திமுக குடும்பத்திற்கு பல லட்சம் கோடி சொத்து எப்படி வந்தது? நேர்வழியில் சம்பாத்தித்தார்களா? வயக்காட்டில் இறங்கி வேலை செய்யும் எடப்பாடி… எங்கே? பச்சை துண்டை கட்டிக்கொண்டு விவசாயி எனக்கூறுகிறார் ஸ்டாலின்.

தன் உயிர் முக்கியம் என கொரோனா காலத்தில் தனது வீட்டுக்குள்ளேயே மாஸ்க் அணிந்து கொண்டு காணொலிக்காட்சி மூலம் தொண்டர்களை சந்திக்கிறார். தற்போது உள்ள முதல்வர் தன் உயிர் போனாலும் பரவாயில்லை என மக்களுக்காக பாடுபடுகிறார். மற்ற மாநிலங்களில் பள்ளிகள் திறக்கும் போது தமிழக முதல்வர் பெற்றோர் மற்றும் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளை திறக்கவில்லை . பொய்யான வாக்குறுதியை திமுகவினர் கூறுகின்றனர்” எனக் குற்றஞ்சாட்டினார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

ஜோலார்பேட்டை அருகே 3 டன் கடத்தல் ரேஷன் அரிசி பறிமுதல்!

திருப்பத்தூர் ஜோலார்பேட்டை அருகே ரயில் மூலம் கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருப்பத்தூர்...

கைவிட்ட சசிகலா; தடா போட்ட எடப்பாடி… டிடிவி எடுத்த திடீர் முடிவு!

சசிகலாவை மலை போல் நம்பிக்கொண்டிருந்த டிடிவி தினகரனுக்கு நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. அதனால் தான் இரவோடு இரவாகப் பேட்டி கொடுத்த தினகரன், அமமுக சோர்வடைவது...

அரியலூரில் மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற விழிப்புணர்வு வாகன பேரணி!

அரியலூர் அரியலூரில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. தமிழக...

விருப்ப மனு தாக்கல் செய்த விஜயகாந்த் மகன்: எந்த தொகுதியில் போட்டி?

சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி அனைத்து கட்சிகளும் மும்முரமாக களப்பணியாற்றி வரும் நிலையில், தேமுதிக விருப்ப மனு விநியோகத்தை கடந்த மாதம் 25ம் தேதி தொடக்கியது. முதல் நாளே விஜயகாந்த், அவரது...
TopTamilNews