எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வந்தால்தான் நாட்டில் மழை பெய்யும்: அமைச்சர் கருப்பணன்

 

எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வந்தால்தான் நாட்டில் மழை பெய்யும்: அமைச்சர் கருப்பணன்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சலங்கப்பாளையம் ஊராட்சி செந்தாம்பாளையத்தில் நெசவாளா்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பண்ணன் கலந்து கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கருப்பண்ணன், “வரும் தேர்தலில் அனைவரும் அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும். அப்படி வாக்களித்தால் பொதுமக்களுக்காக பல சலுகைகள் காத்திருக்கிறது. காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பது போல நான் அமைச்சராக உள்ளபோதே கூட்டுறவு சங்கங்களின் பிரச்சனையை கூறினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். பதவியில் இல்லாதபோது கூறினால் காரியத்தை செய்ய முடியாது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தன் உயிரைப்பற்றி கவலைப்படாமல் மக்களுக்காக மாவட்டம் தோறும் ஆய்வு செய்து வருகிறார். ஆனால் திமுகவினர் கட்சி வேட்டியை கட்டவே பயப்படுகின்றனர். ஒருபுறம் திமுகவினரே நமது முதல்வரை பாராட்டி வருகின்றனர். அதிமுகவில் சேர பல திமுகவினர் ஆவலாக உள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வந்தால்தான் நாட்டில் மழை பெய்யும்: அமைச்சர் கருப்பணன்

கொரோனாவிற்காக தமிழக அரசு நாள்தோறும் 5 முதல் 10 கோடி ரூபாய் வரை செலவு செய்கிறது. கடந்த மூன்றாண்டுகளாக தமிழகத்தில் மழை இல்லை என்ற சொல்லுக்கே இடமில்லாத வகையில் மழை பெய்துவருகிறது. இன்னும் 5 மாதத்தில் தோ்தல் வரப்போகிறது. முதல்வா் மீண்டும் முதல்வராக வர வேண்டும். அப்போதுதான் நாட்டில் மழை பெய்யும். அதற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். மீண்டும் 5 ஆண்டுகளுக்கு நல்ல ஆட்சி நடைபெறவேண்டும்” எனக் கூறினார்.