பவானியில் 8 அம்மா நகரும் நியாய விலைக்கடையினை இயக்கி வைத்த அமைச்சர் கருப்பணன்

 

பவானியில் 8 அம்மா நகரும் நியாய விலைக்கடையினை இயக்கி வைத்த அமைச்சர் கருப்பணன்

ஈரோடு மாவட்டம், பவானியில் 8 அம்மா நகரும் நியாயவிலைக்கடையினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இயக்கி வைத்தார் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன்.

பவானியில் 8 அம்மா நகரும் நியாய விலைக்கடையினை இயக்கி வைத்த அமைச்சர் கருப்பணன்

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’ பவானி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பருவாச்சி, பெரியவடமலை பாளையம், ஒலகடம் ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கங்கள் மூலம் ‌8 அம்மா நகரும் நியாயவிலைக்கடைகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, பருவாச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் புதுபெருமாபாளையம், பருவாச்சி காட்டூர், புரசகாட்டூர் ஆகிய பகுதிகளுக்கும், பெரியவடமலைபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் நத்தக்காடு, துருசாம்பாளையம், கருக்குபாளையம், சின்னவடமலைபாளையம் ஆகிய பகுதிகளுக்கும், ஒலகடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் குந்துபாயூர் பகுதி என 8 இடங்களில்‌ 962 குடும்ப அட்டைதாரர்கள் தங்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசிய பொருட்களை பெற்று பயன்பெறுவார்கள்‌.

பவானியில் 8 அம்மா நகரும் நியாய விலைக்கடையினை இயக்கி வைத்த அமைச்சர் கருப்பணன்

மேலும், ஈரோடு மாவட்டத்தில்‌ 27 கூட்டுறவுச்‌ சங்கங்கள்‌ மூலம்‌ 51 இடங்களில்‌ அத்தியாவசியப்‌ பொருட்கள்‌ விநியோகம்‌ செய்யப்படவுள்ளது. இத்திட்டத்தின்‌ கீழ்‌
நியாயவிலைக்‌ கடைகளுக்கு ஒரு கிலோ மீட்டர்‌ சுற்றளவுக்கு வெளியே வசிக்கும்‌ குறைந்தது 50 குடும்ப அட்டைதாரர்களுக்கும்‌ மேல்‌ இருக்கும்‌ இடங்கள்‌ தெரிவு செய்யப்பட்டு அத்தியாவசியப்‌ பொருட்கள்‌ விநியோகம்‌ செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்‌ மூலம்‌ ஈரோடு மாவட்டத்தில்‌ 5,002 குடும்பங்களைச்‌ சார்ந்த சுமார்‌ 20,000 நபர்கள்‌பயன்பெறுவார்கள்’’என்று தெரிவித்தார்‌.