13 ஆசிரியர்களுக்கு நல்லாசியர் விருது வழங்கினார் அமைச்சர் கருப்பணன்!

 

13 ஆசிரியர்களுக்கு நல்லாசியர் விருது வழங்கினார் அமைச்சர் கருப்பணன்!

ஈரோடு மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 13ஆசிரியை, ஆசிரியர்களுக்கு நல்லாசியர் விருதினை, தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் வழங்கினார்.
நாடு முழுவதும் செப்.5ம் தேதி ஆசிரியர் தினத்தன்று, சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் நல்லாசிரியர் விருது வழங்கப்படும். ஆனால், முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவால் 7 நாள் துக்கம் நல்லாசிரியர் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது.

13 ஆசிரியர்களுக்கு நல்லாசியர் விருது வழங்கினார் அமைச்சர் கருப்பணன்!

இதைத்தொடர்ந்து, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நல்லாசிரியர் விருது வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் கதிரவன் தலைமையில் இன்று நடந்தது. இதில், தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் கலந்து கொண்டு சிறப்பாக பணியாற்றிய 13ஆசிரியை, ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுக்கான பதக்கம், சான்றிதழ் வழங்கினார். இதில்,ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியை மணிமேகலை, சிவகிரி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியின் தொழிற்கல்வி ஆசிரியர் ராமசாமி, ஈரோடு அரசு மகளிர் மாதிரி மேல்நிலை பள்ளி முதுகலை ஆசிரியர் கோபிநாத், காசிபாளையம் அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் ஜேம்ஸ்பால், வெள்ளோடு அரசு மேல்நிலை பள்ளி உடற்கல்வி ஆசிரியர் நடராஜன், வளையபாளையம் அரசு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியை தன பாக்கியம், ஏழூர் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி தலைமை ஆசிரியை ஆரோக்கிய மேரி, வீரணாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியை சத்திய செல்வி, புன்செய் புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி தலைமை ஆசிரியர் முத்து, சாவக்காட்டுபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி தலைமை ஆசிரியை வசந்தி, கொண்டப்ப நாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியை மணிமேகலை, சித்தோடு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி தலைமை ஆசிரியை கலாவதி, ஜேசீஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளி முதல்வர் முத்துகிருஷ்ணன் ஆகிய 13 பேர் நல்லாசிரியர் விருது பெற்றனர்.

13 ஆசிரியர்களுக்கு நல்லாசியர் விருது வழங்கினார் அமைச்சர் கருப்பணன்!

இந்நிகழ்ச்சியில், ஈரோடு எஸ்பி தங்கதுரை, டிஆர்ஓ கவிதா, முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, ஈரோடு மாவட்ட எம்எல்ஏ., க்கள் கே.எஸ். தென்னரசு, சிவசுப்பிரமணியன், ஈஸ்வரன், ராஜாகிருஷ்ணன் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.