மருத்துவப்படிப்பில் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவிகளுக்கு அமைச்சர் கருப்பணன் நிதியுதவி

மருத்துவப்படிப்பில் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவிகளுக்கு அமைச்சர் கருப்பணன் நிதியுதவி

ஈரோடு

ஈரோடடு மாவட்டத்தில் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ள அரசுப்பள்ளி மாணவிகளுக்கு, சுற்றுசூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் நேரில் பாராட்டி, நிதியுதவி வழங்கினார்.

மருத்துவப்படிப்பில் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவிகளுக்கு அமைச்சர் கருப்பணன் நிதியுதவி

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அரசு மேல்நிலை பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்த திருச்செல்வி, தரணி பிரியா, ஜி.எஸ்.சுபாஷினி, சோனிகா ஆகியோரும், பி.மேட்டுப்பாளையம் அரசு
மேல்நிலைப்பள்ளியில் படித்த மாலினி அன்னபூர்ணா என்பவரும் தமிழக அரசின் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின் கீழ் பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். இதனையொட்டி கவுந்தபாடி முகாம் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், அந்த மாணவிகளுக்கு, சுற்றுச்சூழல் அமைச்சர் கே.சி.கருப்பணன் நேரில் பாராட்டு தெரிவித்து, தலா 20 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.

மருத்துவப்படிப்பில் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவிகளுக்கு அமைச்சர் கருப்பணன் நிதியுதவி

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த 7.5 சதவிகித இடஒதுக்கீடு, தமிழக அரசுப்பள்ளி ஏழை, எளிய மாணவர்களின் கனவை நிறைவேற்றும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் 22 மாணவர்கள் மருத்துவப்படிப்பில் சேர்ந்து உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.