“அமைச்சர் காமராஜ் உடல்நலம் தேறி வருவார்” : அமைச்சர் விஜயபாஸ்கர்

 

“அமைச்சர் காமராஜ் உடல்நலம் தேறி வருவார்” :  அமைச்சர் விஜயபாஸ்கர்

அமைச்சர் காமராஜ் மீண்டு வருவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

“அமைச்சர் காமராஜ் உடல்நலம் தேறி வருவார்” :  அமைச்சர் விஜயபாஸ்கர்

கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி உணவுத்துறை அமைச்சர் காமராஜூக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதை தொடர்ந்து கடந்த 19 ஆம் தேதி உடல்நலனில் தொய்வு ஏற்பட்டதால் அமைச்சர் காமராஜ் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். பின்னர் அங்கிருந்து எம்ஜிஎம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

“அமைச்சர் காமராஜ் உடல்நலம் தேறி வருவார்” :  அமைச்சர் விஜயபாஸ்கர்

இந்நிலையில் இன்று சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ‘மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் காமராஜ் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் . நேற்று இரவு மருத்துவமனையில் தான் இருந்தேன். அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் மீண்டு வருவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது’ என்றார்.