அமைச்சர் காமராஜ் விரைவில் டிஸ்சார்ஜ் : மருத்துவமனை தகவல்!

 

அமைச்சர் காமராஜ் விரைவில் டிஸ்சார்ஜ் : மருத்துவமனை தகவல்!

உணவுத்துறை அமைச்சர் காமராஜ் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த 5ம் தேதி உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உடல் நலக் குறைவு காரணமாக ராமாபுரத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு ஒரு கொரோனாவுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது . இதை அடுத்து, கடந்த 7ஆம் தேதி எடுக்கப்பட்ட சிடி ஸ்கேனில் அவருக்கு கொரோனா இல்லை என தெரியவந்ததால் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு அமைச்சர் வீடு திரும்பினார்.

அமைச்சர் காமராஜ் விரைவில் டிஸ்சார்ஜ் : மருத்துவமனை தகவல்!

இதை தொடர்ந்து, அவருக்கு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. முதலில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவர் உடல் நிலை மோசமாக இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன. ஆனால், அமைச்சர் காமராஜின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும் தான் நேரில் சென்று விசாரித்து வருவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து வந்தார்.

இந்த நிலையில், அமைச்சர் காமராஜ் உடல்நிலை நல்ல முன்னேற்றம் அடைந்திருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. அவர் இயல்பு நிலைக்கு திரும்பி இருப்பதாகவும் உடலில் ஆக்சிஜன் அளவு அதிகரிப்பதால் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.