‘இதுவரை 60 லட்சம் நெல் மூட்டைகள் கொள்முதல்’ – அமைச்சர் காமராஜ்

 

‘இதுவரை 60 லட்சம் நெல் மூட்டைகள் கொள்முதல்’ – அமைச்சர் காமராஜ்

நெல் கொள்முதல் தாமதம் ஆவதாக புகார் எழுந்து வரும் நிலையில், 60 லட்சம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பருவம் தவறி பெய்து வரும் கனமழையால் விளை நிலங்கள் சேதமடைந்து விட்டதாகவும் அறுவடை செய்யப்பட்ட நெற்பயிர்கள் மழையில் நனைந்து வீணாவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர். அதே போல கொள்முதல் நிலையங்களில், கொள்முதல் செய்யப்பட தாமதம் ஆவதால் மழையில் நனைந்த நெல் பயிர்கள் முளைத்து விடுவதாகவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

‘இதுவரை 60 லட்சம் நெல் மூட்டைகள் கொள்முதல்’ – அமைச்சர் காமராஜ்

இதனிடையே விவசாயிகளை காக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் அரசை விமர்சித்து வந்தார். இந்த நிலையில் நெல் கொள்முதல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் காமராஜ், அக்.1ம் தேதி முதல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு இருப்பதாகவும் இதுவரை 60 லட்சம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாகவும் திமுக ஆட்சியில் 6 லட்சம் மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது என்றும் தெரிவித்தார்.

‘இதுவரை 60 லட்சம் நெல் மூட்டைகள் கொள்முதல்’ – அமைச்சர் காமராஜ்

மேலும், ஈரப்பதம் இருந்தாலும் உடனே நெல் கொள்முதல் செய்யப்பட்டு அரவைக்கு அனுப்பப்படும் என்றும் நெல் ஈரப்பத அளவு பற்றி ஆய்வு செய்ய விரைவில் மத்திய அரசு அதிகாரிகள் தமிழகம் வரவிருக்கின்றன என்றும் அமைச்சர் தெரிவித்தார்.