சூரப்பா மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் காமராஜ்

 

சூரப்பா மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் காமராஜ்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பாளையங்கோட்டை கிராமத்தில் மாற்று கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சியில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பங்கேற்றார்.

சூரப்பா மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் காமராஜ்

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் காமராஜ், “வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் மணல் மூட்டைகள் சாக்குப் பைகள் உள்ளிட்டவை தமிழகம் முழுவதும் தாழ்வான பகுதிகளில் தயார் நிலையில் இருக்கின்றன. தமிழகத்திற்கு அமித்ஷா வருகையையொட்டி பாஜகவினர் தெரிவித்துவரும் கருத்துக்கள் அதிமுகவை குறிப்பிடுவதாக எடுத்துக்கொள்ள முடியாது. பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா குறித்து ஒரு நபர் கமிஷன் அமைத்து உரிய விசாரணைகள் நடைபெற்று வருகிறது. விசாரணைக்கு பின் அவர் மீது தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறினார்.

முன்னதாக அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்கள் குறித்து தமிழக அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. சூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டு, அண்ணா பல்கலை. சிறப்பு அந்தஸ்து குறித்து தமிழக அரசின் அனுமதியின்றி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது என பல மோதல்கள் அரசுடன் ஏற்பட்ட நிலையில் அவருக்கு எதிராக விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.