தஞ்சை- நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அமைச்சர் காமராஜ் ஆய்வு

தஞ்சை- நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அமைச்சர் காமராஜ் ஆய்வு

தஞ்சை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டதை அடுத்து உணவு அமைச்சர் காமராஜ் ஆய்வுகள் மேற்கொண்டார்.

தஞ்சை- நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அமைச்சர் காமராஜ் ஆய்வு

அம்மாபேட்டை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்த அவர் ஞாயிற்றுக்கிழமையும் நெல் கொள்முதல் நிலையம் செயல்படும் என அறிவித்தார்.

தஞ்சை- நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அமைச்சர் காமராஜ் ஆய்வு

அப்போது பேசிய அமைச்சர் காமராஜ், இந்த ஆண்டு சரியான பருவத்தில் தண்ணீர் திறக்கப்பட்டதால் அனைத்து இடங்களிலும் குறுவை சாகுபடி சிறப்பாக நடைபெற்றுள்ளது. இதையடுத்து,

தஞ்சை- நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அமைச்சர் காமராஜ் ஆய்வு

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கபட்டு புதிய கொள்முதல் விலை அறிவிக்கப்பட்டுள்ளது. தினசரி ஆயிரம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தஞ்சை- நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அமைச்சர் காமராஜ் ஆய்வு

தஞ்சை மாவட்டத்தில் 227 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. விளைச்சல் அதிகமுள்ள பகுதிகளில் , புதிய கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமையும் கொள்முதல் செய்யப்படும் என்றும் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் உடன் இருந்தார்.