அரசு மருத்துவமனையிலிருந்து எம்ஜிஎம் கொண்டு செல்லப்பட்டார் அமைச்சர் காமராஜ்

 

அரசு மருத்துவமனையிலிருந்து எம்ஜிஎம் கொண்டு செல்லப்பட்டார் அமைச்சர் காமராஜ்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அமைச்சர் காமராஜ், மியாட் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இருப்பினும் தொற்று பாதிப்பு முழுமையாக குறைந்த பாடில்லை. அந்த வகையில் நேற்றைய தினம் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. திருவாரூரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் காமராஜ் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வந்தார்.இந்த சூழலில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர் சென்னை மியாட் மருத்துவமனையில் கடந்த 6 ஆம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அரசு மருத்துவமனையிலிருந்து எம்ஜிஎம் கொண்டு செல்லப்பட்டார் அமைச்சர் காமராஜ்

கிட்டத்தட்ட 2 வாரமாக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கோவிட் தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ் இன்று அம்மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு அரசு ராஜிவ் காந்தி பொதுமருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. ஆனால் அங்கு அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ராஜீவ்காந்தியிலிருந்து அமைந்தகரை எம்ஜிஎம் மருத்துவமனைக்கு கொண்டனர். அங்கு அமைச்சர் காமராஜ்க்கு எக்மோ மூலம் சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது.