ஓபிஎஸ் ட்வீட்டுக்கு அர்த்தம் இதுதான்…! அமைச்சர் கடம்பூர் ராஜு விளக்கம்!

 

ஓபிஎஸ் ட்வீட்டுக்கு அர்த்தம் இதுதான்…! அமைச்சர் கடம்பூர் ராஜு விளக்கம்!

அதிமுகவில் எவ்வித பிரச்சினையும் இல்லை என்பதையே ஓபிஎஸ் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார் என அமைச்சர் கடம்பூர் ராஜு விளக்கமளித்துள்ளார்.

ஓபிஎஸ் ட்வீட்டுக்கு அர்த்தம் இதுதான்…! அமைச்சர் கடம்பூர் ராஜு விளக்கம்!

கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ஓபிஎஸ் ட்வீட் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

ஓபிஎஸ் ட்வீட்டுக்கு அர்த்தம் இதுதான்…! அமைச்சர் கடம்பூர் ராஜு விளக்கம்!

அதற்கு பதிலளித்த அவர், “அதிமுகவில் எந்த பிரச்சினையும் இல்லை என்பதையே அவர் ட்வீட்டில் கூறியுள்ளார். ஓபிஎஸ் முதல்வராக இருந்தவர். தற்போது அரசு சிறப்பாக செயல்பட துணை முதல்வராக இருந்து உறுதுணையாக உள்ளார். அதிமுக செயற்குழு கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. தேர்தல் நிலைப்பாடு, கூட்டணி குறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால் முதல்வர் வேட்பாளர் குறித்துஅங்கு அந்த பேச்சும் எழவில்லை. அது மட்டுமே பெரியதாக பேசப்பட்டது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், செயற்குழு கூட்டத்தில் நடந்தவை தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக அவர் சூசகமாக கூறியுள்ளார். ஓபிஎஸ் கழக ஒருங்கிணைப்பாளர் அவரை அமைச்சர்கள், நிர்வாகிகள் சந்திப்பதில் தவறில்லை. அதை அரசியலாக பார்க்க வேண்டாம். அக். 7 முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு குறித்து கட்சி தலைமையே முடிவு செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக ஓபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் , தமிழக மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே எனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளன. இனியும் அவ்வாறே இருக்கும்.எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது! எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது!! எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்!! என்று பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.