“இந்த ஆட்சி நீடிக்குமா என்ற எண்ணம் மக்களைப் போல எங்களுக்கும் இருந்தது” : அமைச்சர் கடம்பூர் ராஜூ

“இந்த ஆட்சி நீடிக்குமா என்ற எண்ணம் மக்களைப் போல எங்களுக்கும் இருந்தது” : அமைச்சர் கடம்பூர் ராஜூ

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இந்த ஆட்சி நீடிக்குமா என்ற எண்ணம் மக்களைப் போல எங்களுக்கும் இருந்தது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

“இந்த ஆட்சி நீடிக்குமா என்ற எண்ணம் மக்களைப் போல எங்களுக்கும் இருந்தது” : அமைச்சர் கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜு அனைத்து சமுதாய மக்களின் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது .இதில் கலந்துகொண்டு பேசிய அவர்,” 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கடவுளின் அருளால் தப்பித்தேன். குறைவான வாக்கு வித்தியாசத்தில் தான் நான் அந்த தேர்தலில் வெற்றி பெற்றேன். நான் அமைச்சர் ஆனதையே  டிவியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன்.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இந்த ஆட்சி நீடிக்குமா என்ற எண்ணம் மக்களைப் போல எங்களுக்கும் இருந்தது. அந்த நிலையில் ஒவ்வொருவரையும் பிடித்து வைத்து கூவத்தூரில் பட்டபாடு பெரியபாடு. தேர்தலுக்குப் பிறகுதான் இந்த ஆட்சி ஒரு நிலையான ஆட்சியாக மாறியது. அதற்கு முதல்வர் பழனிசாமியை  தான் பாராட்ட வேண்டும். .எல்லா பிரச்சினைகளையும் அவர் சமாளிக்க கூடியவராக இருந்தார். அதற்கான அறிவும் ,ஆற்றலும் அவரிடம் உள்ளது.” என்றார்.

“இந்த ஆட்சி நீடிக்குமா என்ற எண்ணம் மக்களைப் போல எங்களுக்கும் இருந்தது” : அமைச்சர் கடம்பூர் ராஜூ

தொடர்ந்து பேசிய அவர், “நான் கடவுள் நம்பிக்கை கொண்டவன் .நேரம் ,காலத்தை  நம்பக்கூடியவன். எதிர்க்கட்சிகள் குற்றம் சொன்னாலும், மக்களால் எந்த குற்றத்தையும் சொல்லமுடியாத அளவுக்கு திறமையான எளிமையான முதல்வரை  பெற்றுள்ளோம். மூன்றாவது முறை வெற்றி பெறுவது மக்கள் கையில் தான் உள்ளது” என்றார்.