‘விரைவில் நல்ல செய்தி வரும்’ தியேட்டர்கள் திறப்பு குறித்து அமைச்சர் பதில்!

 

‘விரைவில் நல்ல செய்தி வரும்’ தியேட்டர்கள் திறப்பு குறித்து அமைச்சர் பதில்!

தியேட்டர்கள் திறப்பது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தலால் மக்கள் கூடும் இடங்களான தியேட்டர்கள், மால்கள் என அனைத்தும் மூடப்பட்டது. அதன் பிறகு, மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வணிக வளாகங்கள் உள்ளிட்ட அனைத்தையும் திறக்க அனுமதி வழங்கிய அரசு தியேட்டர்களை திறக்க அனுமதிக்கவில்லை. சினிமா மற்றும் சீரியல் படப்பிடிப்புகளுக்கு கூட அண்மையில் வழங்கப்பட்டது.

‘விரைவில் நல்ல செய்தி வரும்’ தியேட்டர்கள் திறப்பு குறித்து அமைச்சர் பதில்!

தியேட்டர்களில் சமூக இடைவெளியை பின்பற்ற முடியாது. அப்படியே, ஒரு சீட் விட்டு மற்றொரு சீட்டில் மக்கள் அமர்ந்து தனிமனித இடைவெளியை கடைபிடித்து படம் பார்த்தாலும் அதனை ஈடு செய்ய டிக்கெட் கட்டணம் அதிகரிக்கும். இவ்வாறாக பல்வேறு சிக்கல்கள் தியேட்டர்கள் திறப்பதில் நீடிக்கிறது. இதனிடையே, ரிலீஸ் ஆகாமல் இருக்கும் நூற்றுக்கணக்கான படங்கள் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றன. அதனால் எப்போது தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்படும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

‘விரைவில் நல்ல செய்தி வரும்’ தியேட்டர்கள் திறப்பு குறித்து அமைச்சர் பதில்!

இந்த நிலையில், தியேட்டர்கள் திறப்பது குறித்து விரைவில் நல்ல செய்தி வரும் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார். மக்களையும், தியேட்டர் உரிமையாளர்களையும் பாதிக்காத வகையில் தியேட்டர்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.