‘பாஜகவில் ஆளுமைமிக்க தலைவர் இல்லை’ என்ற அர்த்தத்தில் அவர் கூறியிருக்கலாம்: அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

‘பாஜகவில் ஆளுமைமிக்க தலைவர் இல்லை’ என்ற அர்த்தத்தில் அவர் கூறியிருக்கலாம்: அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

தமிழகத்தில் சட்டமன்றத்தேர்தல் நெருங்கி வருவதால், பிரதான கட்சிகளான திமுகவும் அதிமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கிவிட்டன. இன்னும் ஒரு சில மாதங்களில் தேர்தல் பிரச்சாரங்கள் தொடங்க உள்ளன. அதே போல வரும் டிசம்பர் மாதம் வாக்காளர் வரைவு பட்டியல் வெளியாக உள்ளது. இதனிடையே அதிமுக- பாஜக கூட்டணி குறித்து பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.

‘பாஜகவில் ஆளுமைமிக்க தலைவர் இல்லை’ என்ற அர்த்தத்தில் அவர் கூறியிருக்கலாம்: அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

அதாவது விநாயகர் சதுர்த்திக்கு எதிர்ப்பு, இபாஸ் உள்ளிட்ட பல விவகாரங்களில் பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக அங்கம் வகிக்கும் ஆட்சி தான் தமிழகத்தில் இனி நடக்கும் என்றும் தமிழகத்தில் ஆளுமைமிக்க தலைவர் இல்லை என்றும் கூறியிருந்தார்.

‘பாஜகவில் ஆளுமைமிக்க தலைவர் இல்லை’ என்ற அர்த்தத்தில் அவர் கூறியிருக்கலாம்: அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

இந்த நிலையில் பொன். ராதாகிருஷ்ணனின் கருத்துக்கு பதில் அளிக்கும் விதமாக அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், பாஜகவில் ஆளுமைமிக்க தலைவர் இல்லை என்ற நோக்கில் அவர் அவ்வாறு கூறியிருக்கலாம் என தெரிவித்தார். மேலும், தற்போது இருக்கும் சூழலில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை என்றும் அவர் கூறினார்.